கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

பிளஸ் 2 தொழிற்கல்வி மாணவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் பயிற்சி

பிளஸ் 2 தொழிற்கல்வி பிரிவில் தேர்ச்சிப் பெற்ற மாணவ, மாணவியருக்கு தனியார் நிறுவனங்களில் தொழில் பழகுநர் பயிற்சி (அப்ரென்டீஸ்ஷிப்)

Updated On :22 மே 2013, 10:45 am IST

பிளஸ் 2 தொழிற்கல்வி பிரிவில் தேர்ச்சிப் பெற்ற மாணவ, மாணவியருக்கு தனியார் நிறுவனங்களில் தொழில் பழகுநர் பயிற்சி (அப்ரென்டீஸ்ஷிப்) வழங்கப்பட உள்ளது.

மத்திய அரசின் தென் மண்டல தொழில் பழகுநர் பயிற்சி வாரியம் சார்பில் இந்தப் பயிற்சிக்குரிய தகுதியான மாணவர்களைத் தேர்ந்தெடுக்க மே 29-ஆம் தேதி நேர்காணல் நடைபெற உள்ளது.

சென்னை தாம்பரம் ஜெய்கோபால் கரோடியா தேசிய மேல்நிலைப் பள்ளியில் அன்று காலை 9.30 மணிக்கு நடைபெறும் இந்த நேர்காணலில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழுடன் வர வேண்டும்.

டி.என்.எஸ்.சி. வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பிரேக்ஸ் இந்தியா, டெல்பி டி.வி.எஸ்., ப்ரைன்ஸ் பொறியியல் நிறுவனம், ஆம்பிட்ரான் தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட பல முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்று மாணவ, மாணவியரை பயிற்சிக்காக தேர்ந்தெடுக்க உள்ளனர்.

இந்த வாய்ப்பினை பிளஸ் 2 மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.