4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

3-ம் நாளாக பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஆட்டோ, ரியல் எஸ்டேட் பங்குகள் சரிவு!

இன்றைய பங்குச்சந்தைகள் வர்த்தக நிலவரம் பற்றி...

News image

பங்குச்சந்தை - ANI

Updated On :17 ஜூன் 2026, 11:22 am IST

இந்த வாரத்தில் தொடர்ந்து 3-ம் நாளாக பங்குச்சந்தைகள் இன்றும் (ஜூன் 17) உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,080.09 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11 மணியளவில் சென்செக்ஸ் 289.09 புள்ளிகள் உயர்ந்து 77,097.56 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 79.85
புள்ளிகள் உயர்ந்து 24,069 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.35 சதவீதம், ஸ்மால்கேப் குறியீடு 0.44 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகிறது.

நிஃப்டி 50 பங்குகளில் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை அதிக சரிவைச் சந்தித்த நிறுவனங்களாக உள்ளன.

துறைவாரியாக நிஃப்டி ஆட்டோ, உலோகம், ரியல் எஸ்டேட் குறியீடுகள் சரிந்தும் ஐடி, மீடியா, பார்மா ஆகியவற்றின் குறியீடுகள் உயர்ந்தும் வர்த்தகமாகின்றன.

சென்செக்ஸில் 30 பங்குகளில் கோட்டக் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், மாருதி ஆகிய நிறுவனங்கள் சரிந்தும் மற்ற நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தும் வர்த்தகமாகின்றன.

பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 0.72% குறைந்து 78.39 டாலராக உள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா உயர்ந்து 94.46 ஆக உள்ளது.

அமெரிக்க - ஈரான் அமைதி ஒப்பந்தம், கச்சா எண்ணெய் விலை சரிவால் பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.

அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகித முடிவுக்காக முதலீட்டாளர்கள் காத்திருக்கின்றனர்.

Summary

Stock Market: Sensex rises 250 pts, Nifty around 24,050

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.