முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 13 காசுகள் சரிந்து ரூ. 95.43 ஆக நிறைவு!சென்செக்ஸ் 388 புள்ளிகளுடனும், நிஃப்டி 24,500-க்குக் கீழே சரிவு!!
/

பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் உயர்வு!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...

News image

பங்குச்சந்தை - IANS

Updated On :16 ஜூலை 2026, 10:53 am IST

பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2-ம் நாளாக இன்று (ஜூலை 16) உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,388.42 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 10.45 மணியளவில் சென்செக்ஸ் 201.02 புள்ளிகள் உயர்ந்து 77,386.45 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 52.35 புள்ளிகள் உயர்ந்து 24,130.85 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

நிஃப்டி50 குறியீட்டில் எச்.சி.எல். டெக், மாருதி சுசுகி இந்தியா மற்றும் விப்ரோ இந்தியா ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாக உள்ளன.

சென்செக்ஸ் பங்குகளில், எச்.சி.எல். டெக்னாலஜிஸ், மஹிந்திரா & மஹிந்திரா, மாருதி, டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை முக்கிய லாபம் பெற்று வருகின்றன. எடர்னல், பஜாஜ் ஃபின்சர்வ், ஆக்சிஸ் வங்கி, பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை பின்தங்கின.

நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.32 சதவீதம், ஸ்மால்கேப் குறியீடு 0.24 சதவீதம் சரிந்து வர்த்தகமாகிறது.

துறைவாரியாக நிஃப்டி ஐடி, நுகர்வோர் சேவைகள், மீடியா, பார்மா, ஆட்டோ குறியீடுகள் உயர்ந்தும் கெமிக்கல், பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், நிதி சேவைகள், ரியல் எஸ்டேட் பங்குகள் சரிந்தும் வருகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 96.31 ஆகச் சரிந்துள்ளது.

Summary

Stock Market: Sensex rangebound, up 200 pts, Nifty tops 24,100

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.