இந்த வாரத்தில் தொடர்ந்து 4-ம் நாளாக இன்றும்(ஜூன் 18) பங்குச்சந்தைகள் உயர்வுடன் நிறைவு பெற்றுள்ளன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,131.66 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலையில் சென்செக்ஸ் சரிந்த நிலையில் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 254.36 புள்ளிகள் உயர்ந்து 77,409.98 புள்ளிகளில் நிலைபெற்றது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 82.30
புள்ளிகள் உயர்ந்து 24,168 புள்ளிகளில் இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது.
நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.41சதவீதம், ஸ்மால்கேப் குறியீடு 0.44 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகிறது.
நிஃப்டி 50 பங்குகளில் மேக்ஸ் ஹெல்த்கேர், அதானி என்டர்பிரைசஸ், இன்டர்குளோப் ஏவியேஷன் ஆகியவை அதிக லாபம் பெற்ற நிறுவனங்களாக உள்ளன.
துறைவாரியாக நிஃப்டி பொதுத்துறை வங்கிகள், ஹெல்த்கேர், ரியல் எஸ்டேட் ஆகியவற்றின் குறியீடுகள் உயர்ந்தும் ஐடி பங்குகள் சரிந்தும் வர்த்தகமாகின.
சென்செக்ஸில் 30 பங்குகளில் ரிலையன்ஸ், டைட்டன், எல்&டி, எம்&எம் உள்ளிட்ட நிறுவனங்கள் சரிந்தும் பவர் கிரிட், அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல், ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தும் வர்த்தகமாகின்றன.
பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 2% குறைந்து 77.96 டாலராக உள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 94.33 ஆக உள்ளது.
அமெரிக்க - ஈரான் அமைதி ஒப்பந்தம், கச்சா எண்ணெய் விலை சரிவால் பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.
Summary
Stock Market: Sensex gains 254 pts, Nifty ends at 24,168
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










