FOLLOW US

ON GOOGLE DISCOVER

அகழாய்வுப் பணிகளை தவெக அரசு தொடர வேண்டும்! மு.க. ஸ்டாலின் லண்டனில் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மு.க. ஸ்டாலின்!மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

2-ம் நாளாக பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகம்! ஐடி, பார்மா பங்குகள் உயர்வு!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் பற்றி...

News image

பங்குச்சந்தை - கோப்புப்படம்

Updated On :14 ஜூலை 2026, 12:02 pm IST

இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2-ம் நாளாக இன்றும் (ஜூலை 14) சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,272.34 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 373.75 புள்ளிகள் குறைந்து 77,242.65 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 104.85 புள்ளிகள் குறைந்து 24,106.15 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

சென்செக்ஸ் 30 பங்குகளில் டாடா ஸ்டீல், பாரதி ஏர்டெல், டிசிஎஸ், அதானி போர்ட்ஸ், என்டிபிசி, இன்ஃபோசிஸ், ஐடிசி, சன் பார்மா, டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தும் மற்ற நிறுவனங்களின் பங்குகள் சரிந்தும் வருகின்றன.

நிஃப்டி மிட்கேப், நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.37, 0.57 சதவீதம் சரிந்து வர்த்தகமாகின.

துறைசார் குறியீடுகளில், நிஃப்டி ஐடி, பார்மா, எஃப்எம்சிஜி, உலோகப் பங்குகள் உயர்ந்தன. நிஃப்டி நிதி சேவைகள், ஆட்டோ,ரியல் எஸ்டேட் உள்ளிட்ட மற்ற குறியீடுகள் சரிவுடன் வர்த்தகமாகின்றன. அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.

வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 95.95 ஆக இருந்தது.

Summary

Stock Market: Sensex falls 300 pts, Nifty tops 24,100

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.