கர்நாடகத்தின் 7 சட்டமேலவை இடங்களில் 5-ஐ கைப்பற்றிய காங்கிரஸ்!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

தலையில் கல்லைப் போட்டு பெயின்டர் கொலை

சென்னை அமைந்தகரையில் தலையில் கல்லைப் போட்டு பெயின்டர் சனிக்கிழமை கொலை செய்யப்பட்டார்.

Updated On :2 ஜூன் 2013, 3:23 am IST

சென்னை அமைந்தகரையில் தலையில் கல்லைப் போட்டு பெயின்டர் சனிக்கிழமை கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸார் தரப்பில் தெரிவித்தது: அமைந்தகரை முத்து இருளாண்டி காலனியைச் சேர்ந்தவர் கி. கோடீஸ்வரன் (42). இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் 4 வீடுகள் உள்ளன. அந்த வீடுகளை வாடகைக்கு விட்டு அதன் மூலம் வரும் வருமானத்தில் வாழ்ந்து வந்தாராம். சில சமயங்களில் விளம்பரங்களையும் வரைந்து வந்தாராம்.

இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் (21), அல்லி (50) ஆகியோருடன் கோடீஸ்வரன் வெள்ளிக்கிழமை இரவு மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை காலையில் எழுந்து பார்த்த அக்கம் பக்கத்தினர் தலையில் கல்லை போட்டு கொடூரமான முறையில் கோடீஸ்வரன் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அருகில் போதையேறிய நிலையில் சிலம்பரசன் மற்றும் அல்லி இருந்தார்களாம்.

போலீஸ் விசாரணையில் சிலம்பரசன் கோடீஸ்வரனுக்கு சொந்தமான வீட்டில் குடியிருந்தது தெரியவந்துள்ளது. இந்தக் கொலையில் மேலும் இருவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சிலம்பரசன் மற்றும் அல்லி ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.