திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு கன்னியாகுமரியில் புதிதாகக் கோயில் கட்டுவது என்று திருப்பதி தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது.
இந்தப் புதிய கோயில் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை வரும் ஜூன் 4-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கன்னியாகுமரியில் நடைபெறவுள்ளது.
இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானத் தலைவர் கே.ஆனந்தகுமார் ரெட்டி சென்னையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:
2010-ஆம் ஆண்டு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரியில் பிரமாண்ட முறையில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்குத் திரண்ட பக்தர்களின் கூட்டத்தைக் கண்ட தேவஸ்தான நிர்வாகிகள், ஸ்ரீவெங்கடேச பெருமாளுக்கு கன்னியாகுமரியிலேயே திருக்கோயில் கட்டுவது என்று தீர்மானித்தனர்.
அதன்படி தற்போது கோயில் கட்டும் பணி தொடங்கவுள்ளது. இந்த புதிய கோயில் கட்டுவதற்காக விவேகானந்தா கேந்திரம் ஐந்தரை ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் இந்தத் திருக்கோயில் கட்டும் பணிக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரூ.22 கோடியே 50 லட்சம் ஒதுக்கியுள்ளது.
கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை ஜூன் 4-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6.30 மணிக்கு நடைபெறும். கோயில் கட்டும் பணி இரண்டு ஆண்டுகளில் நிறைவு பெறும்.
திருப்பதி கோயிலில் நடைபெறும் அனைத்து பூஜைகளும் கன்னியாகுமரியில் அமையவுள்ள பெருமாள் கோயிலிலும் ஆகம விதிகளின்படி நடைபெறும். மேலும் இந்தக் கோயிலில் வேத பாடசாலை, கோசாலை மற்றும் திருமண மண்டபம் போன்றவையும் நிறுவப்படும். பக்தர்களுக்காக கன்னியாகுமரியிலேயே பிரசாதம் தயாரிக்கப்படும்.
தமிழ்நாட்டு பக்தர்களின் நீண்ட நாளைய கோரிக்கையை ஏற்று தற்போது கன்னியாகுமரியில் இந்த புதிய திருக்கோயில் அமையவுள்ளது. ஸ்ரீவெங்கடேச பெருமாள், ஸ்ரீதேவி தாயார் மற்றும் பூதேவி தாயார் சுவாமிகளுடன் அமையவுள்ள இந்தக் கோயிலானது கன்னியாகுமரியின் கலியுக வைகுண்டம் என போற்றப்படும் என்றார் ஆனந்தகுமார் ரெட்டி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எபோலா பரவல்! காங்கோவில் பலி எண்ணிக்கை 200-ஐ கடந்தது!

ஒருநாள் போட்டிகளில் இஷான் கிஷன் புதிய சாதனை!

டி.கே. சிவகுமார் தலைமையில் அமோக வெற்றி.. கர்நாடகத்தின் 7 சட்டமேலவை இடங்களில் 5-ஐ கைப்பற்றிய காங்கிரஸ்!!

அமைதி ஒப்பந்தம்! சுவிட்சர்லாந்தில் நாளை அமெரிக்கா - ஈரான் பிரதிநிதிகள் நேரில் சந்திப்பு!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


