ஆவடியில் பழச்சாறு கடைக்குள் கார் புகுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
கே.கே. நகர் நெசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராமய்யா (54). இவர் அண்ணா நகர் மாநகர போக்குவரத்துக் கழக தொழிலாளர் யூனியனின் துணை செயலாளராக இருந்தார். ஆவடியில் உள்ள பஸ் நிலையத்தின் அருகே இருக்கும் பழச்சாறு கடைக்கு வெளியே சனிக்கிழமை பிற்பகல் பஸ்ஸýக்கு காத்திருந்தாராம்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த டிராவல்ஸ் கார், ராமய்யா மற்றும் அங்கு நின்றிருந்தவர்கள் மீது மோதிவிட்டு கடைக்குள் புகுந்ததாம். இதில் ராமய்யா அதே இடத்தில் உயிரிழந்தார். கல்லூரி தேர்வெழுத வந்திருந்த ரம்யா, நாடியம்மாள், கீர்த்திகா ஆகிய மாணவிகள் காயமடைந்தனர்.
காயமடைந்த மூன்று மாணவிகளும் அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த ராமய்யாவின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆவடியைச் சேர்ந்த கார் டிரைவர் கார்த்திக் (30) கைது செய்யப்பட்டார். அவர் போதையில் காரை ஓட்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எபோலா பரவல்! காங்கோவில் பலி எண்ணிக்கை 200-ஐ கடந்தது!

ஒருநாள் போட்டிகளில் இஷான் கிஷன் புதிய சாதனை!

டி.கே. சிவகுமார் தலைமையில் அமோக வெற்றி.. கர்நாடகத்தின் 7 சட்டமேலவை இடங்களில் 5-ஐ கைப்பற்றிய காங்கிரஸ்!!

அமைதி ஒப்பந்தம்! சுவிட்சர்லாந்தில் நாளை அமெரிக்கா - ஈரான் பிரதிநிதிகள் நேரில் சந்திப்பு!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


