கர்நாடகத்தின் 7 சட்டமேலவை இடங்களில் 5-ஐ கைப்பற்றிய காங்கிரஸ்!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

லாரியில் மாடு கடத்தல்: டிரைவர் மீது வழக்கு

சட்டத்துக்குப் புறம்பாக மாடுகளை ஏற்றிச் சென்ற மினி லாரி ஓட்டுநர் மீது கால்நடை துயர் துடைப்புக் கழகம் வழக்குப் பதிவு செய்துள்ளது.

Updated On :2 ஜூன் 2013, 3:25 am IST

சட்டத்துக்குப் புறம்பாக மாடுகளை ஏற்றிச் சென்ற மினி லாரி ஓட்டுநர் மீது கால்நடை துயர் துடைப்புக் கழகம் வழக்குப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து கால்நடை துயர் துடைப்புக் கழக அதிகாரிகள் கூறியது: ஆரணியில் இருந்து சென்னைக்கு வந்த மினி லாரி ஒன்றில் அதிகப்படியான மாடுகளை ஏற்றி வந்ததை கழகத்தின் உறுப்பினர் ஒருவர் பார்த்து தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து, லாரியை போரூர் அருகே துயர் துடைப்புக் கழக ஆய்வாளர்கள் தடுத்து நிறுத்தினர். 6 மாடுகளை மட்டுமே ஏற்ற வேண்டிய வாகனத்தில் 12 மாடுகளை ஏற்றியிருந்தனர். மேலும், தண்ணீர், உணவு, முதலுதவி வசதிகள் ஆகியவை லாரியில் இல்லை.

கால்நடை மருத்துவரிடம் சான்றிதழும் பெறவில்லை. இதனையடுத்து, 12 மாடுகளும் மீட்கப்பட்டு, வேப்பேரி கால்நடை துயர் துடைப்புக் கழக வளாகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

லாரியின் ஓட்டுநர் ஆலப்பாக்கம் பழனிவேல் (32) என்பவர் மீது பிராணி வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.