தமிழகம் மற்றும் புதுவையில் வியாழக்கிழமை மழையோ, இடியுடன்கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் மழையோ இடியுடன்கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதன்கிழமை காலை வரையிலான நிலவரப்படி சின்னக்கல்லாற்றில் 60 மி.மீ. மழை பெய்துள்ளது. தேவாலா, வால்பாறையில் 40 மி.மீ. மழையும், நடுவட்டம், செங்கோட்டையில் 30 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
பெரியாறு, தளி, மேல் ஆலத்தூர், பென்னாகரம், ஆரணி (20 மி.மீ.), உத்திரமேரூர், கூடலூர், செய்யாறு, போடிநாயக்கனூர், பொள்ளாச்சி, பேச்சிப்பாறை, குளச்சல், தேன்கனிகோட்டை (10 மி.மீ.) ஆகிய பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்

தனியாா்மயமாக்கல் திட்டத்துக்கு அரசு புத்துயிா் அளிக்க வேண்டும்: நீதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவா்அரவிந்த் பனகாரியா

முனம்பம் நில விவகாரம்: கேரள வக்ஃப் வாரியத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்






