பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

இந்திரா சிவசைலம் அறக்கட்டளை விருதுக்கு பாம்பே ஜெயஸ்ரீ தேர்வு

கர்நாடக இசைப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ இந்த ஆண்டுக்கான இந்திரா சிவசைலம் அறக்கட்டளை விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :12 செப்டம்பர் 2013, 4:05 am IST

கர்நாடக இசைப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ இந்த ஆண்டுக்கான இந்திரா சிவசைலம் அறக்கட்டளை விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த அறக்கட்டளை சார்பில் சென்னையில் வரும் அக்டோபர் 12-ஆம் தேதி நடைபெறும் இசைக் கச்சேரியையும் அவர் வழங்குவார்.

சிறந்த இசைக் கச்சேரிகளை வழங்கியதற்காகவும், பாரம்பரிய இசை வடிவத்துடனேயே பாடுவதற்காகவும் அவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலுள்ள மியூசிக் அகாதெமியில் விருது வழங்கும் விழா, இசைக் கச்சேரி ஆகியவை அக்டோபர் 12-ஆம் தேதி நடைபெறும் என இந்திரா சிவசைலம் அறக்கட்டளையின் மல்லிகா ஸ்ரீனிவாசன், மியூசிக் அகாதெமியின் தலைவர் என். முரளி ஆகியோர் தெரிவித்தனர். அமால்கமேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஏ.சிவசைலத்தின் மனைவி இந்திரா சிவசைலம் நினைவாக இந்த அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.