பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கிளியை காப்பாற்ற உயிரைக் கொடுத்த இளைஞர்

சென்னை சோழிங்கநல்லூரில், காகத்திடம் இருந்து கிளியைக் காப்பாற்ற முயன்ற இளைஞர் மின்சார வயர் மீது கைபட்டதால் உயிரிழந்தார்.

Updated On :12 செப்டம்பர் 2013, 3:52 am IST

சென்னை சோழிங்கநல்லூரில், காகத்திடம் இருந்து கிளியைக் காப்பாற்ற முயன்ற இளைஞர் மின்சார வயர் மீது கைபட்டதால் உயிரிழந்தார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியது:

சோழிங்கநல்லூர் லால்பகதூர் சாஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர் மகன் அருண்குமார் (18). இவர் 10ம் வகுப்பு படித்து விட்டு தந்தைக்கு உதவியாக சரக்கு ஆட்டோ ஓட்டி வந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை அருண்குமார் ராஜீவ்காந்தி சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது ஒரு காகம் கிளியை துரத்திச் சென்று கொத்தியதை பார்த்தாராம்.

காக்கையிடம் இருந்து தப்பிய கிளி அருகில் இருந்த மரத்தில் தஞ்சம் புகுந்தது. அங்கேயேயும் சென்ற காகம் கிளியை மீண்டும் கொத்தியது.

இதைக் கவனித்த அருண்குமார் கிளியை காப்பாற்றுவதற்காக மரத்தில் ஏறினார். அப்போது லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. மரத்தில் ஏறி காகத்தை விரட்டி கிளியைக் காப்பாற்ற முயன்ற அருண்குமாரின் கை அருகில் சென்ற மின்சார கம்பியில் பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து அவர் கீழே விழுந்து இறந்தார்.

இது குறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.