பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சென்னையில் இடி மின்னலுடன் கொட்டித் தீர்த்த மழையால் சாலைகளில் வெள்ளம்

சென்னை கே.கே.நகர். கிண்டி, அண்ணாநகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் புறநகர் பகுதிகளில் ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், பழவந்தாங்கல், மீனம்பாக்கம், பரங்கிமலை, பெருங்குடி, மேடவாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம், பள்ளிக்கரணை ஆகிய இடங்களிளும் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது.

News image
Updated On :12 செப்டம்பர் 2013, 4:50 am IST

சென்னை கே.கே.நகர். கிண்டி, அண்ணாநகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் புறநகர் பகுதிகளில் ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், பழவந்தாங்கல், மீனம்பாக்கம், பரங்கிமலை, பெருங்குடி, மேடவாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம், பள்ளிக்கரணை ஆகிய இடங்களிளும் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது.

சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் பொது மக்கள் அவதிப்பட்டனர். தேங்கிய தண்ணீரை உடனுக்கு உடன் அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட மடிப்பாக்கம் தெற்கு ராம் நகரில் மழைநீர் சாலைகளில் தேங்கி நின்றதால் பொதுமக்கள் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த பகுதியில் உள்ள 300க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்து உள்ளது. உள்ளகரம் மேடவாக்கம் சாலையில் இருந்து மடிப்பாக்கம் வரை உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி இருந்தது. உள்ளகரம் புழுதிவாக்கம் நகராட்சிக்கு உட்பட்ட வடக்கு ராம்நகர், சீனிவாசன் நகர், பாகீரதி நகர் பகுதிகளில் மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

புழுதிவாக்கம் பஸ் நிலையத்தில் இருந்த மரம் விழுந்தது. இதனால் அங்குள்ள மின்சார வயர்கள் அறுந்தன. உடனே அந்த பகுதியில் மின்சாரம் தடை செய்யப்பட்டது.

பெருங்குடி பகுதியில் கந்தன்சாவடி, திருவேங்கடம் நகர், கோதண்டராமன் நகர், மாருதி நகர், சரவணா நகர், அண்ணா நெடுஞ்சாலை, மயான சாலை, கல்லுக்குட்டை பகுதி. டெலிபோன்ஸ் நகர் உள்பட பகுதிகளில் மழைநீர் தேங்கி இருந்தது. இந்த பகுதிகளில் கே.பி.கந்தன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்து மழைநீரை வெளியேற்ற உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.