பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சென்னையில் துப்புரவுப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள துப்புரவுப் பணியாளர்களுக்கும் மற்ற பணியாளர்களுக்கு வழங்கப்படுவது போன்ற ஊதியம் வழங்கவேண்டும் என்று துப்புரவுப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

News image
Updated On :12 செப்டம்பர் 2013, 3:46 am IST

விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள துப்புரவுப் பணியாளர்களுக்கும் மற்ற பணியாளர்களுக்கு வழங்கப்படுவது போன்ற ஊதியம் வழங்கவேண்டும் என்று துப்புரவுப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் சென்னை மாநகராட்சி தலைமையகமான ரிப்பன் கட்டட வளாகத்தில் புதன்கிழமை காலை நடைபெற்றது.

இதில் சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தைச் சேர்ந்த சுமார் 600-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

அப்போது, மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் பணிபுரியும் என்.எம்.ஆர்., தாற்காலிக, தொகுப்பூதிய தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யவேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் குடியிருப்பு வசதி, தொழிலாளர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டையை வழங்க வேண்டும்; பழைய மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது போன்ற ஊதியத்தை விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள தொழிலாளர்களுக்கும் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.