சென்னையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்ததால் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரை இறங்க முடியவில்லை. இதனால் பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாயினர்.
சென்னை விமான நிலையத்துக்கு நள்ளிரவு முதல் அதிகாலை 4 மணி வரை பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான விமானங்கள் வருகின்றன.
இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தொடங்கி பலத்த மழை பெய்தது.
இதனால் சென்னைக்கு வந்த அனைத்து விமானங்களும் திடீர் காலநிலை மாற்றத்தால் தாமதமாக தரை இறங்கின.
மேலும் சென்னை விமான நிலையத்திலிருந்தும் ஏராளமான விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
இதன் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
ஜெர்மனியிலிருந்து 317 பயணிகளுடன் புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு சென்னை வந்த தனியார் விமானம் தரை இறங்க முடியாததால் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
பின்னர் காலை 7 மணிக்கு சென்னையில் அது மீண்டும் தரை இறக்கப்பட்டது. இதே போல், கோலாலம்பூரில் இருந்து வந்த டைகர் விமானம், மும்பை ஏர் இந்தியா விமானம், தில்லி தனியார் விமானம் போன்றவை சென்னையிலிருந்து தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா?

திருநெல்வேலி மனோன்மணியம் பல்கலை.யில் சேர ஜூன் 12-ல் நுழைவுத் தேர்வு

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை!

பாரதிராஜாவுக்கு என்னைப் பிடிக்கும்; என் நடிப்பு பிடிக்காது! ரஜினிகாந்த் பேட்டி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


