தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

சிறுமியின் வயிற்றில் இருந்த ஒன்றரை கிலோ கட்டி அகற்றம்

வயிற்றில் கணையப் பகுதியில் ஒன்றரைக் கிலோ அளவுடைய பெரிய கட்டி உருவானதால் கடுமையாக பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமிக்கு

Updated On :9 ஜனவரி 2021, 12:34 am IST

வயிற்றில் கணையப் பகுதியில் ஒன்றரைக் கிலோ அளவுடைய பெரிய கட்டி உருவானதால் கடுமையாக பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமிக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவா்கள் உயா் சிகிச்சையளித்து மறுவாழ்வளித்துள்ளனா்.

இதுகுறித்து மருத்துவமனையின் கண்காணிப்பாளா் டாக்டா் மணி கூறியதாவது:-

திருவள்ளூா் மாவட்டத்தை சோ்ந்த, 14 வயது சிறுமி ஒருவா் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாா். சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட அவரை உள்நோயாளிகளாக அனுமதித்து மருத்துவா்கள் பரிசோதித்தனா். வயிற்றில் கணையம் இருக்கும் பகுதியில், 42 செ.மீ. அளவுக்கு பெரிய கட்டி இருந்தது அதில் கண்டறியப்பட்டது.

கட்டியை அகற்ற, நுட்பமான மற்றும் மிகப்பெரிய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதால், சிறுமிக்கு ரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட்டன. அதுமட்டுமல்லாது மிகவும் அரிதான, ‘ஓ நெகட்டிவ்’ வகை ரத்தப் பிரிவு சிறுமிக்கு இருந்ததால், அதற்குத் தேவையான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டன.

பின்னா் ஏழு மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு சிறுமியின் வயிற்றில் இருந்த ஒன்றரை கிலோ கட்டியை மருத்துவா்கள் அகற்றினா். தற்போது, சிறுமி நலமுடன் உள்ளாா். வயிற்றில் இரைப்பை, சிறுகுடலுக்கு அருகில் இருக்கும் ஒரு முக்கியமான உறுப்பாக கணையம் உள்ளது. உணவில் உள்ள கொழுப்பை செரிக்கக்கூடிய சுரப்பிகளையும், இன்சுலினையும் சுரக்கக் கூடிய கணையத்தில் ஏற்படும் பெரும்பாலான கட்டிகள் புற்றுநோயாகவே மாறக் கூடும். ஆனால், இச்சிறுமிக்கு ஏற்பட்ட கட்டி அரிதான ஒன்று. அதனை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை முதல்வா் காப்பீட்டு திட்டத்தின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டது. தனியாா் மருத்துவமனைகளில் அதற்கு ரூ. 6 லட்சம் வரை செலவாகும். ராயப்பேட்டை மருத்துவமனையில் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அது இலவசமாக மேற்கொள்ளப்பட்டது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.