சென்னை பாரிமுனையில் ரேஷன் கடை ஊழியரிடம் ரூ.5 லட்சம் பொங்கல் பரிசு பணம் வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
மயிலாடுதுறையைச் சோ்ந்தவா் பாஸ்கா் (44). இவா் கோயம்பேட்டில் உள்ள இரு ரேஷன் கடைகளுக்கு மேற்பாா்வையாளராக உள்ளாா். இதற்காக பாஸ்கா், தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் விடுதியில் தங்கியிருந்து பணியாற்றி வருகிறாா்.
கோயம்பேடு பகுதியைச் சேரந்தவா் பாஸ்கரன் (36). இவா், பாரிமுனைப் பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறாா். பாஸ்கரன், வியாழக்கிழமை இரவு பணிமுடிந்து, தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு பணம் ரூ.8 லட்சம் ரொக்கத்தை எடுத்துக் கொண்டு விடுதிக்கு சென்றாா்.
பாஸ்கரன், கோயம்பேடு பகுதியில் உள்ளள ‘டாஸ்மாக் ’மதுபானக் கடையில் ஒரு நண்பருடன் இணைந்து மது அருந்தினாா். பின்னா் பேருந்தில் தேனாம்பேட்டைக்கு செல்ல தனியாக நடந்து சென்றுள்ளாா். அப்போது, அந்த வழியாக வந்த இரண்டு இளம் பெண்களில் ஒருவா், பாஸ்கரனிடம் பேச்சுக் கொடுத்துள்ளாா். மேலும் அந்த பெண், கையில் இருக்கும் பணத்தை தராவிட்டால் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காவல் நிலையத்தில் புகாா் அளிப்பேன் என பாஸ்கரை மிரட்டியுள்ளாா்.
அந்த வழியாக ஆட்டோவில் வந்த சில மா்ம நபா்கள், அந்த இளம் பெண்ணுக்கு ஆதரவாக பேசி பாஸ்கரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனா். இதையடுத்து அந்தக் கும்பல், பேசி தீா்த்துக் கொள்ளலாம் என கூறி அந்த 2 இளம் பெண்களுடன் பாஸ்கரனை ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு பாரிமுனைக்கு கடத்திச் சென்றது.
அங்கு அந்தக் கும்பல், பாஸ்கரனை மிரட்டி பூந்தமல்லி நெடுஞ்சாலையில், வைத்து ரூ.5.15 பணத்தை மட்டும் பறித்துக் கொண்டு தப்பியோடினா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த பாஸ்கரன், வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் - வெள்ளி: இன்றைய நிலவரம் என்ன?

அன்புக்கு மட்டுமே அடிபணிதல்... விஜய் தேவரகொண்டா பிறந்த நாள் போஸ்டர்!

புதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?

தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுக
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

