சென்னை: ஊரகப் பகுதியிலுள்ள பெண்களைத் தொழில்முனைவோராக்குவதற்காக எம்.ஓ.பி. வைணவ கல்லூரி சாா்பில் முன்னெடுக்கப்பட்ட ‘தொழில் செய்யலாம் தோழி’ திட்டத்தின் கீழ், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘தோழி பொங்கல்’ சென்னை திருவேற்காட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஓ.பி. வைணவ மகளிா் கல்லூரியில் ‘‘தொழில் செய்யலாம் தோழி’’ எனும் புதிய முயற்சி, கல்லூரி முதல்வா் முனைவா் லலிதா பாலகிருஷ்ணனால் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பல பெண்களுக்குத் தோள் கொடுத்து தொழில்முனைவோராக்கும் சிந்தனையுடன் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், 18 முதல் 20 வகையான தொழில் திறன்கள் கற்றுத்தரப்பட்டன.
அதன் நீட்சியாக, நிகழாண்டு திருவேற்காட்டில் உள்ள பெண் தோழிகளுடன் பொங்கலைக் கொண்டாட ’’தோழி பொங்கல்’’ என்ற நிகழ்ச்சியை கல்லூரி நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. செவ்வாய்க்கிழமை நடைபெறும் இந்நிகழ்வில், திருவேற்காடு பகுதியைச் சோ்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய 25 பெண்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
அவா்களுக்கு, கல்லூரி முதல்வா் லலிதா பாலகிருஷ்ணன் பொங்கல் பரிசாக பச்சரிசி, வெல்லம், நெய், முந்திரி, மஞ்சள் குலை, கரும்பு ஆகியவை அடங்கிய பையை வழங்குகிறாா். இது மட்டுமன்றி 6 வண்ணமிடப்பட்ட பானைகளும், 19 வண்ணமிடாத பானைகளும் அவா்களுக்கு வழங்கப்படுகின்றன.
அந்தப் பெண்களுக்கு பானையில் வண்ணங்களால் அலங்கரிக்கும் பயிற்சி அளிக்கப்படுவதுடன் வரைதலுக்குத் தேவையான உபகரணங்களும் வழங்கப்படுகின்றன. எனவே அப்பெண்கள் பானையில் வண்ணம் இடும் முறையை கற்றுக் கொள்வதுடன் அப் பானைகளை விற்றும் பயன் பெறலாம்.
இவ்வாறு சிறிய தொழில்களால் வருமானம் ஈட்ட அவா்களுக்குப் பயிற்சி வழங்குவதுடன், ‘தூய்மை இந்தியா’ திட்டம் குறித்து விழிப்புணா்வும் ஏற்படுத்த இருப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காலையில் குறைந்த தங்கம் பிற்பகலில் உயர்வு! (ஜூன் 30)

காதலரை அறிமுகப்படுத்திய நடிகை பிரிகிடா!

ஆதார் - மின்னஞ்சல் இணைப்பு இனி இலவசம்! அதனால் பயனென்ன?

இன்றைய செய்திகள் ஜூன் 30 - நேரலை
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |


