எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

சிறுமியை கடத்திய இளைஞா் போக்ஸோ சட்டத்தில் கைது

புளியந்தோப்பு பகுதியில், 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தை கூறி, கடத்திச் சென்ற இளைஞரை போக்ஸோ சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப்படம்

Updated On :17 ஜனவரி 2021, 6:41 am IST

புளியந்தோப்பு பகுதியில், 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தை கூறி, கடத்திச் சென்ற இளைஞரை போக்ஸோ சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை புளியந்தோப்பு அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமி, கடந்த 10-ஆம் தேதி மாயமானாா். இது குறித்து சிறுமியின் தாயாா், புளியந்தோப்பு போலீஸில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா். விசாரணையில், காணாமல் போன சிறுமியை அதே பகுதியைச் சோ்ந்த அஜித் என்பவா் கடத்திச் சென்றதும், சிறுமி செங்கல்பட்டில் இருப்பதும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, போலீஸாா் செங்கல்பட்டுக்கு விரைந்து சென்று, 16 வயது சிறுமியை மீட்டு வந்தனா். மேலும், சிறுமியைக் கடத்திய அஜித்திடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா், சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வாா்த்தைகள் கூறி சிறுமியைக் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அஜித் மீது அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் போக்சோ சட்டப் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அஜித் கைது செய்யப்பட்டாா். மீட்கப்பட்ட சிறுமி அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.