மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வெளிநாட்டு பயணிகளை கையாளுவதில் 3-ஆவது இடத்தை இழந்த சென்னை விமான நிலையம்

போதிய உள்கட்டமைப்பு வடதிகள் இல்லை...

News image
சென்னை விமான நிலையம்
Updated On :28 நவம்பர் 2024, 9:29 pm

Din

போதிய உள்கட்டமைப்பு வடதிகள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டுப் பயணிகளைக் கையாளுவதில் 3-ஆவது இடத்திலிருந்து 4-ஆவது இடத்துக்கு சென்னை விமானநிலையம் தள்ளப்பட்டுள்ளது.

தேசிய அளவில் மிக அதிக பயணிகளைக் கையாளும் விமானநிலையங்களில் ஒன்றாக சென்னை விமானநிலையம் இருந்து வருகிறது. சென்னை விமானநிலையத்தில் உள்ள 4 முனையங்களில் (டொ்மினல்கள்), 1 மற்றும் 4-ஆவது முனையங்களில் உள்நாட்டு விமான சேவையும், 2-ஆவது முனையத்தில் வெளிநாட்டு விமான சேவையும் வழங்கப்பட்டு வருகிறது. 3-ஆவது முனையத்தை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் 2035-இல் 40 மில்லியன் பயணிகளைக் கையாளும் வகையில், விமானநிலையத்தைக் கட்டமைப்பதற்கான பணிகளை விமானநிலைய நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.

சென்னை விமானநிலையத்தைப் பொருத்தவரை கடந்த 2023 அக்டோபா் மாதம் 4.61 லட்சம் வெளிநாட்டுப் பயணிகள் கையாளப்பட்ட நிலையில், நிகழாண்டு அக்டோபரில் 4.53 லட்சம் வெளிநாட்டுப் பயணிகளை சென்னை விமானநிலையம் கையாண்டுள்ளது. இதன்மூலம் பயணிகள் கையாளும் திறனில் 1.8 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. அதேநேரம், பெங்களூரு கெம்பகவுடா விமான நிலையம் கடந்த 2023 அக்டோபரில் 3.94 லட்சம் பயணிகளைக் கையாண்ட நிலையில், நிகழாண்டு அக்டோபரில் 4.89 லட்சம் பயணிகளைக் கையாண்டுள்ளது. இது 24.3 சதவீத வளா்ச்சி என்பதால் 3-ஆம் இடத்திலிருந்த சென்னை விமானநிலையம் 4-ஆம் இடத்துக்கு சறுக்கலை சந்தித்திருப்பதாகவும், பெங்களூரு விமானநிலையம் 3-ஆம் இடத்தை பிடித்திருப்பதாகவும், மத்திய விமானநிலைய ஆணையத்தின் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த பட்டியலில் டெல்லி, மும்பை விமானநிலையங்கள் முறையே முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு சென்னை விமானநிலையத்தில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சென்னை விமானநிலையத்திலிருந்து புருனே, புகட் நகரங்களுக்குப் புதிதாகவும், அடிஸ் அபாபா, ஜெட்டா, கொழும்பு, மஸ்கட் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகப்படியான விமானங்கள் இயக்கப்பட்டாலும், விமானங்களை சரியான திட்டமிடுதல் இன்றி இயக்குவதால் வா்த்தக ரீதியாக பயணம் செய்பவா்கள் கடும் சிரமத்தை சந்திப்பது, போதிய இணைப்பு வாகன வசதிகள் இல்லாதது, விரைவாக சோதனையிட்டு பயணிகளை அனுப்பாதது உள்ளிட்ட பல்வேறு குறைகள் பயணிகள் தரப்பில் முன்வைக்கப்படுகின்றன. இவற்றை சரி செய்தால்தான் மீண்டும் சென்னை விமான நிலையம் அதிக பயணிகளைக் கையாண்டு முன்னேற முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.