ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி: இப்போது எப்படி இருக்கிறார்?

ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி: இப்போது எப்படி இருக்கிறார்?

நடிகா் ரஜினிகாந்துக்கு திடீரென உடல்நலக் குறைவு...
Published on

நடிகா் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வந்த ரஜினிகாந்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகத் தெரிகிறது.  இதையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவா் திங்கள்கிழமை மாலையில் அனுமதிக்கப்பட்டாா்.

மருத்துவ பரிசோதனையில், அவருக்கு வயிற்றுப் பகுதி ரத்த நாளத்தில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

X
Dinamani
www.dinamani.com