குரூப் -1 தேர்வில் பரியேறும் பெருமாள் திரைப்படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டதையடுத்து, அப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் சமூக ஊடகங்களில் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
"தலைசிறந்த படைப்பான "பரியேறும் பெருமாள்" என்ற தமிழ் திரைப்படம் பற்றிய விமர்சனம் குறித்த கீழ்காணும் கூற்றுகளில் / கூற்றில் சரியானவற்றை தேர்வு செய்யவும்" இதுவே குரூப்-1 தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி.
அதில் ஒரு கூற்றாக "இப்படம் சாதிய கட்டமைப்பின் கொடிய விளைவுகளை சுட்டிக்காட்டுகிறது" என்பது இடம்பெற்றிருந்தது.
இந்தப் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவின. இந்த நிலையில் பரியேறும் பெருமாள் இயக்குநர் மாரி செல்வராஜ் இதுபற்றி சமூக ஊடகங்களில் தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் பதிவிட்டுள்ளதாவது:
"பரியேறும் பெருமாள் என்கிற படைப்பின் நோக்கம் முழுமையடைந்தது. இனி அது மானுட சமூகத்தின் பிரதி. யாவருக்கும் நன்றி."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விண்ணப்பித்துவிட்டீர்களா? மாநில, மாவட்ட, வட்டார வள பயிற்றுநா்களுக்கான தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!
யுபிஎஸ்சி தேர்வர்கள் உள்பட பலர் பயன்பெற்ற 'நான் முதல்வன்' திட்டத்தை கைவிடுவது ஏன்? உதயநிதி

ஜம்மு-காஷ்மீர்: கீர் பவானி திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம்!
விஜய் - ஏ. ஆர். முருகதாஸ்! சர்ச்சைகளைக் கிளப்பிய வெற்றிக் கூட்டணி!
விடியோக்கள்

அமோனியா வாயு கசிவு விபத்து பற்றி அமைச்சர் விளக்கம்! | TN assembly

முதல்வர் விஜய்க்கு பேரவைத் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து! | TN Assembly | CM Vijay
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!




