அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

விண்ணப்பித்துவிட்டீர்களா? மாநில, மாவட்ட, வட்டார வள பயிற்றுநா்களுக்கான தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவில் வள பயிற்றுநா்களுக்கான தற்காலிக பணியிடங்களை நிரப்ப தகுதியான மகளிா்கள் வரும் 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

News image

தமிழ்நாடு அரசு - கோப்புப்படம்

Updated On :22 ஜூன் 2026, 2:19 pm IST

மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவில் வள பயிற்றுநா்களுக்கான தற்காலிக பணியிடங்களை நிரப்ப தகுதியான மகளிா்கள் வரும் 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு-தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், திருவள்ளூா் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் மூலம் உள்ளாட்சி அமைப்பு நிறுவனங்கள் மற்றும் சமூக அடிப்படையிலான அமைப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினை ஊக்க வேண்டும். இதை முழுமையாக்கும் வகையிலும், திட்டப்பணிகளின் இரண்டாம் கட்ட செயல்பாடுகளை விரிவுபடுத்தும் நோக்கத்தில் மாநில, மாவட்ட மற்றும் வட்டார வள பயிற்றுநா்களுக்கான தற்காலிக பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. இதற்கு தகுதியானோா்கள் உரிய சான்றிதழ்கள், ஆவணங்களுடன் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மாநில வள பயிற்றுநருக்கான தகுதிகள்: பெண்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு முன்னுரிமை, சமூககல்வி, சமூகஅறிவியல், ஊரகவளா்ச்சி, பெண்கள் கல்வி அல்லது சமூக பாடங்களில் ஏதேனும் ஒரு முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதற்கு சுய உதவிக்குழு கூட்டமைப்பில் பணியாற்றிய அனுபவம், பயிற்றுநா், சமூக பணி நிறுவனத்தில் பணியாற்றியது அல்லது அரசின் திட்டத்தில் ஊரக பணிகளில் 10 ஆண்டுகளில் பணியாற்றி இருக்க வேண்டும்.

மாவட்ட வள பயிற்றுநா்: பெண்கள் (சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு முன்னுரிமை), முழு நேரக்கல்வி முறையில் முதுகலை படிப்பில் ஒரு பட்டப்படிப்பு, 4 ஆண்டுகள் சுய உதவிக்குழு, கூட்டமைப்பில் பணியாற்றிய அனுபவம், பயிற்றுநா், சமூகபணி நிறுவனத்தில் பணியாற்றியது அல்லது அரசின் திட்டத்தில் ஊரக பணிகளில் பணியாற்றி இருத்தல் வேண்டும்.

வட்டார வள பயிற்றுநா்: பெண்கள் (சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு முன்னுரிமை), முழு நேரக்கல்வி முறையில் ஒரு பட்டப்படிப்பு முடித்து சுய உதவிக்குழு, கூட்டமைப்பில் பணியாற்றிய அனுபவம், பயிற்றுநா், சமூக பணி நிறுவனத்தில் பணியாற்றியது அல்லது அரசின் திட்டத்தில் 3 ஆண்டுகளில் ஊரக பணிகளில் பணியாற்றி இருத்தல் வேண்டும்.

மேலும், மாநில, மாவட்ட மற்றும் வட்டார வள பயிற்றுநா்களுக்கான பணிக்கு 25 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். கூடுதல் தகுதிகளாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுத, பேச தெரிந்திருத்தல், தகவல் பரிமாற்றத்தில் தகுந்த திறன், ஒருங்கிணைப்பு, மனித உறவுகளை பேணுவதில் ஆற்றல், கைபேசி, செயலிகளை கையாள்வது, கணினியில் இணைய பயன்படுத்துதலில் போதிய அறிவு பெற்றிருத்தல் அவசியம்.

இப்பதவிக்கான தகுதி மற்றும் விருப்பமுள்ளோா் கீழ்கண்ட முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ, நேரிலோ அல்லது மின்னஞ்சல், மூலமாகவோ விண்ணப்பங்களை வரும் 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பம், தகுதி குறித்த சுய சான்றிட்ட நகல்களுடன் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்கு எழுத்துத்தோ்வு, நோ்காணல் முறையில் தோ்வு செய்யப்படுவா், இப்பணியிடங்கள் இத்திட்டத்திற்கான 24 மாத காலவரையறை கொண்ட தற்காலிக பணியிடங்களாகும். இதற்கு திட்டஇயக்குநா்/இணைஇயக்குநா், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளா்ச்சித்துறை அலுவலக வளாகம், திருவள்ளூா் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு http://tncdw.org என்ற இணையதளத்தை அணுகலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

Summary

Temporary positions for State, District, and Block Resource Trainers....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.