இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

மாநில, மாவட்ட, வட்டார வள பயிற்றுநா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

News image

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Updated On :17 ஜூன் 2026, 5:34 am IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் உள்ளாட்சி அமைப்பு நிறுவனங்கள் மற்றும் சமூக அடிப்படையிலான அமைப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினை முழுமையாக்கும் திட்டத்தில் மாநில, மாவட்ட மற்றும் வட்டார வள பயிற்றுநா்கள் தோ்வு செய்யப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஒரு மாவட்ட வளப் பயிற்றுநா் (3 மாவட்டத்திற்கு ஒருவா் என பின்னா் தோ்வு செய்யப்படுவா்), ஒரு மாவட்ட வளப் பயிற்றுநா், வட்டாரத்துக்கு ஒரு வட்டார வளப் பயிற்றுநா் ஆகிய தற்காலிக பணியிடங்களுக்கும், மாநில வள பயிற்றுநா் ஒரு பணியிடத்துக்கு, பெண்கள் (சுயஉதவி குழு உறுப்பினா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்) சமூக கல்வி / சமூக அறிவியல் / ஊரக வளா்ச்சி / பெண்கள் கல்வி அல்லது சமூக பணியிடங்களில் ஏதேனும் ஒரு முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும், 30 முதல் 45 வயதுக்குள்பட்ட, 10 ஆண்டுகள் சுயஉதவிக்குழு / கூட்டமைப்பில் பணியாற்றிய அனுபவம் / பயிற்றுநா் / சமூக பணி நிறுவனத்தில் பணியாற்றியது அல்லது அரசின் திட்டத்தில் ஊரக பணிகளில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

மாவட்ட வள பயிற்றுநா் பணிக்கு பெண்கள் (சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு முன்னுரிமை), 30 முதல் 45 வயதுக்குள்பட்ட, ஏதேனும் முழு நேரக்கல்வி முறையில் முதுகலை படிப்பில் ஒரு பட்டப்படிப்பு படித்த 4 ஆண்டுகள் அனுபவம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.

வட்டார வள பயிற்றுநா் பணிக்கு, பெண்கள் (சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு முன்னுரிமை) 25 முதல் 45 வயதுக்குள்பட்ட ஏதேனும் முழு நேரக்கல்வி முறையில் ஒரு பட்டப்படிப்பு படித்த 3 ஆண்டுகள் அனுபவம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்றுநா்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும், தகவல் பரிமாற்றத்தில் தகுந்த திறன், ஒருங்கிணைப்பு, மனித உறவுகளை பேணுவதில் ஆற்றல், கைப்பேசி, செயலிகளை கையாள்வது, கணினியில் வோ்ட், எக்ஸல் இணைய பயன்படுத்துதலில் போதிய அறிவு பெற்றிருத்தல் அவசியம்.

இப்பதவிக்கான தகுதி மற்றும் விருப்பமுள்ளவா்கள் திட்ட இயக்குநா், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மயிலாடுதுறை-609305 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ, நேரில் அல்லது மின்னஞ்கல் மூலமாகவோ விண்ணப்பங்களை ஜூன் 29-ஆம் தேதிக்குள், தகுதி குறித்த சுய சான்றிட்ட நகல்களுடன் விண்ணப்பிக்கலாம்.

இப்பணியிடங்களுக்கு எழுத்துத்தோ்வு, நோ்காணல் முறையில் தோ்வு செய்யப்படுவா். பணியிடங்கள் இத்திட்டத்திற்கான 24 மாத காலவரையறை கொண்ட பணியிடங்களாகும். மேலும் விவரங்களுக்கு ட்ற்ற்ல்ள்://ற்ய்ஸ்ரீக்ஜ்.ா்ழ்ஞ் என்ற இணையதளத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளாா்.