சென்னை: உடநலம் சரியிலாமல் இருக்கும் தனது அறிமுக நாயகனை சந்தித்து இயக்குநர் பாரதிராஜா கண்ணீர் சிந்திய விடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
1990-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'என் உயிர்த் தோழன்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் பாபு. அவர்தான் அந்தப் படத்துக்கு வசனமும் எழுதியிருந்தார். அந்தப் படத்தினைத் தொடர்ந்து 'என் உயிர்த் தோழன்' பாபு என்றே சினிமா வட்டாரத்தில் அழைக்கப்பட்டார். பின்னர் விக்ரமன் இயக்கத்தில் 'பெரும்புள்ளி', கோபி பீம்சிங் இயக்கத்தில் வெளியான 'தாயம்மா' படங்களில் அவர் நாயகனாக நடித்தார்.
அதையடுத்து 'மனசார வாழ்த்துங்களேன்' என்ற படத்தின் சண்டைக் காட்சியில் டூப் போடாமல் நடித்ததால் விபத்தில் சிக்கி பாபுவின் முதுகுத்தண்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக நடமாட முடியாமல் படுத்த படுக்கையானார். இடையே கொஞ்சம் தேறி வந்தாலும் மீண்டும் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கான செலவு அதிகமானது. இதனைத் தொடர்ந்து தனது மருத்துவ சிகிச்சைக்காக திரையுலக நண்பர்களிடம் பாபு கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட அவரை அறிமுகப்படுத்திய இயக்குநர் பாரதிராஜா, பாபுவை நேரில் சென்று சந்தித்துள்ளார். அப்போது பாரதிராஜாவிடம் பாபு நெகிழ்ச்சியுடன் பேசுவதும், அதனைத் தொடர்ந்து பாரதிராஜா உணர்சிவயப்பட்டு கண்ணீர் சிந்தும் விடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. இது பார்வையாளர்களை உருக வைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

3ஆவது முறையாக தங்கக் கையுறை விருதுபெறும் கோல் கீப்பர்!

”இதுவரை முடிவெடுக்கவில்லை!” தவெகவிற்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து திருமா
புதிய அத்தியாயத்தின் தொடக்கம்! விஜய்க்கு கீர்த்தி சுரேஷ் வாழ்த்து!

தவெக விஜய்க்கு வாழ்த்து, திமுக ஸ்டாலினுக்கு நன்றி : சத்யராஜ்
வீடியோக்கள்

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு


