மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

இணையத்தில் கசிந்த மாஸ்டர் படக் காட்சிகள்: லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள்

ஒன்றரை வருடப் போராட்டத்துக்குப் பிறகு மாஸ்டர் படத்தை உங்களுக்கு வழங்கவிருக்கிறோம்.

News image
Updated On :12 ஜனவரி 2021, 12:08 pm IST

விஜய் நடித்த மாஸ்டர் படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் அதன் சில காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளன. இதையடுத்து படக்காட்சிகளைச் சமூகவலைத்தளங்களில் பகிர வேண்டாம் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். 

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார் விஜய். மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசை - அனிருத். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக இயங்கவில்லை. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. நாளை முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. மாஸ்டர் படத்தின் முதல் நாள், முதல் காட்சியைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகிறார்கள். மாஸ்டர் படத்தைச் சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் சில காட்சிகள் இணையத்தளங்களில் கசிய விடப்பட்டுள்ளன. இதைக் கண்டு படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது. இதையடுத்து மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் தெரிவித்ததாவது:

ஒன்றரை வருடப் போராட்டத்துக்குப் பிறகு மாஸ்டர் படத்தை உங்களுக்கு வழங்கவிருக்கிறோம். நீங்கள் திரையரங்குகளில் படத்தை ரசிப்பதற்காகத்தான் அத்தனையும் செய்துள்ளோம். கசிய விடப்பட்டுள்ள மாஸ்டர் படக்காட்சிகளைச் சமூகவலைத்தளங்களில் பகிர வேண்டாம். ஒருநாள் காத்திருங்கள். அதன்பிறகு மாஸ்டர் படம் உங்களுக்கானது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.