தவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

வாடா போடா நண்பர்கள்

8 பாயிண்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் படம் "வாடா போடா நண்பர்கள்'. "புகைப்படம்' படத்தில் நடித்த நந்தா, "இனிது இனிது' படத்தில் நடித்த ஷரன் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். தெலுங்க

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 11:09 pm IST

8 பாயிண்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் படம் "வாடா போடா நண்பர்கள்'. "புகைப்படம்' படத்தில் நடித்த நந்தா, "இனிது இனிது' படத்தில் நடித்த ஷரன் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். தெலுங்கு சினிமா உலகைச் சேர்ந்த யாஷிகா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் "நிழல்கள்' ரவி, ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சன் டி.வி.யில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் மணிகை, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.

÷படத்தைப் பற்றி இயக்குநர் கூறுகையில், ""இரண்டு நாயகர்கள், ஒரு நாயகி இருப்பதால் இது முக்கோண காதல் கதை இல்லை. நட்பும் காதலும்தான் கரு. நட்பின் வலிமையையும், காதலின் மென்மையையும் புது விதத்தில் சொல்லியிருக்கிறேன். இன்றைய இளைஞர்களின் நட்பையும், காதலையும் மையமாக வைத்து கதை உருவாகியிருக்கிறது.

÷திறமையைப் பயன்படுத்த முடியாதபோது பாதை மாறும் இளைஞர்களின் வாழ்க்கையை இயல்பாக படம் பிடித்திருக்கிறோம். பெரும்பான்மையான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டது. இறுதிக் காட்சிகள் மட்டும் இப்போது படமாகி வருகிறது. பாடல்கள் புது விதத்தில் படமாகியிருக்கிறது. ரசிகர்களுக்கு புதுமையாக இருக்கும்'' என்றார்.

ஒளிப்பதிவு - அருண்ஜேம்ஸ். இசை - சித்தார்த். பாடல்கள் - நா.முத்துக்குமார். படத்தொகுப்பு - சுரேஷ் அரஸ். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.