சென்னை, ஜன.8: முதல்வர் கருணாநிதி கதை, வசனத்தில் உருவாகியுள்ள "இளைஞன்', சன் பிக்சர்ஸ் வெளியிடும் "ஆடுகளம்' உள்ளிட்ட ஐந்து படங்கள் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகின்றன.
இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 2010-ம் ஆண்டில் 145 நேரடித் தமிழ்ப் படங்கள் வெளிவந்தன. கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின. அரசின் மானியப் பட்டியலில் இடம் பிடிப்பதற்காக சிறு, குறு படங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் வெளிவந்ததால், 2011-ம் ஆண்டின் முதல் வாரத்தில் ஒரு சில படங்களே வெளிவந்தன. இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கு ஐந்து படங்கள் வெளியாகின்றன. கவிஞர் பா.விஜய் கதாநாயகனாக நடித்துள்ள "இளைஞன்', சித்திக் இயக்கத்தில் விஜய் - அசின் நடித்துள்ள "காவலன்', கார்த்தி - தமன்னா நடித்துள்ள "சிறுத்தை', "ஆடுகளம்', புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள "கருத்தக்கண்ணன் ரேக்ளா ரேஸ்' ஆகிய படங்கள் ரிலீசாகின்றன.
இதில் "இளைஞன்' மட்டும் அதிகப்படியாக 350-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. "ஆடுகளம்' 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. மீதமுள்ள திரையரங்குகளை "காவலன்', "சிறுத்தை' ஆகிய படங்கள் பகிர்ந்து கொள்வதால் இந்த முறையும் சிறு படங்களை வெளியிட முடியாத நிலை உருவாகியிருப்பதாக தயாரிப்பாளர் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.