மும்பை வெடிகுண்டு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சஞ்சய் தத்துக்கு, ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
18 மாதங்கள் சிறையில் இருந்த அவர் ஜாமீனில் வெளிவந்து படங்களில் நடித்தார். இந்நிலையில் அவரது அப்பீல் மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த 6 ஆண்டு சிறை தண்டனையை 5 ஆண்டாக குறைத்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அவர் மூன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இத்தகவல் அறிந்த பாலிவுட் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழில் விக்ரம் நடித்த "சாமி' படத்தை கே.எஸ்.ரவிக்குமார் ஹிந்தியில் "போலீஸ் கிரி' என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார். இதில் சஞ்சய்தத் நடிக்கிறார். இதைத்தவிர பாலிவுட்டில் அவர் நடிக்கும் சில படங்களுக்கு 100 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது. சஞ்சய் தத்தின் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் நடிக்கும் படங்களில் ஷூட்டிங் நடக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து பாலிவுட் மீடியாக்களுக்கு பதில் அளித்துள்ள சஞ்சய், ""என்னை நம்பிய தயாரிப்பாளர்களை கை விட மாட்டேன். குறிப்பிட்ட காலத்துக்குள் படங்களை முடித்து தந்து விடுவேன்'' என கூறியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நாளைய மின்தடை: வெள்ளக்கோவில்
பல்லடம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

ராசிபுரம் அருகே துப்பாக்கியை காட்டி மிரட்டி நகை, பணம் திருடிய வழக்கில் 2 போ் கைது

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



