ஆர்யா, விஜய் சேதுபதி இருவரும் முதன் முறையாக புதிய படம் ஒன்றில் கைகோர்க்க உள்ளனர். இந்தப் படத்துக்கு புறம்போக்கு என்று தலைப்பிட்டிருக்கிறார்கள்.
எஸ்.பி. ஜனநாதன் இயக்குகிறார். இவர் ‘இயற்கை, ஈ, பேராண்மை’ படங்களை இயக்கியவர். யு டிவி மோஷன் பிக்சர்ஸ், தி வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாலிவுட் படங்களில் பணிபுரிந்த ஸ்டண்ட் மாஸ்டர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றவுள்ளனர்.
படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதியை தவிர மூன்றாவதாக இன்னொரு நாயகனும் நடிக்கப் போகிறார். படத்துக்கான நாயகி வேட்டை நடைபெற்று வருகிறது. படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
படம் குறித்து இயக்குனர் ஜனநாதன் கூறியதாவது: ”புறம்போக்கு என்பதை கொச்சையாகப் பேசுகிறார்கள். இந்த சொல் பற்றி மேலோட்டமான புரிதல் உள்ளது. ஆனால் புறம்போக்கு என்கிற சொல் ஆழமான வரலாற்று ரீதியான பொருள் கொண்டது. வாழ்வியலின் அடிப்படையிலான கருத்தை உள்ளடக்கியதாகும்.
மக்கள் தேவைக்காக இருந்த, பொதுஇடமான புறம்போக்கு நிலங்கள் இன்று மெல்ல மெல்ல தனியாரின் ஆக்கிரமிப்புக்கு ஆளாகி வருகிறது. அதைப் பற்றிய பின்னணியை கொண்ட சிந்தனைதான் இப்படம்.புறம்போக்கு என்று இனியாரும் ஏளனமாக கேலியாகப் பேசவேண்டாம்.
மலை, பனிச்சிகரங்கள், ஆறு, சர்வதேச கடல்பரப்பு, காற்று, ஒளி, நிலவொளி மட்டுமல்ல எல்லையற்ற அண்டவெளியும் கூட புறம் போக்குதான்.எதுவும் தனியுடை மையல்ல. எல்லாமே பொதுவுடைமைதான்” என்றார். படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்குகிறது. 2014 ஏப்ரலில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காதலரை அறிமுகப்படுத்திய நடிகை பிரிகிடா!

ஆதார் - மின்னஞ்சல் இணைப்பு இனி இலவசம்! அதனால் பயனென்ன?

இன்றைய செய்திகள் ஜூன் 30 - நேரலை

சேலம் அருகே கழுத்தறுத்து ஒருவர் கொலை! காவிரியில் வீசப்பட்ட சடலம்!
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |



