மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சரண்யா பொன்வண்ணன், சம்பத் நடிக்கும் 'அம்மா அம்மம்மா

இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன், சம்பத் ஆகியோர் கனவன், மணைவியாக அதாவது கதையின் நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள்.

News image
Updated On :4 செப்டம்பர் 2013, 7:59 am

தினமணி

ஆ.சந்திரசேகர் திரைக்களம் என்ற பட நிறுவனம் சார்பாக மாம்பலம் ஆ.சந்திரசேகர் கதை எழுதி தயாரிக்கும் படம் 'அம்மா அம்மம்மா'.

இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன், சம்பத் ஆகியோர் கனவன், மணைவியாக அதாவது கதையின் நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் ஆனந்த், சுஜிதா, தேவர்தர்ஷினி, டி.பி.கஜேந்திரன், சாந்தி வில்லியம்ஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒரு தாயின் பாசப்போராட்டத்தை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி பாலு மணிவண்ணன் இயக்குகிறார். M.V ரகு இசையமைக்கிறார். இது குறித்து படத்தின் இயக்குனர் கூறியதாவது...

“நான் மோகமுள், பாரதி, பெரியார் போன்ற படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றி உள்ளேன். இந்த படத்தில் சரண்யா – சம்பத் திருமணமாகி 15ஆண்டுகளாகியும் குழந்தை பேறு கிட்டாத தம்பதி.

ஒருநாள் குழந்தைவரம் வேண்டி கோயிலுக்குச் சென்றிருந்தபோது ஆனந்த் – தேவதர்ஷினி குடும்பத்தைச் சந்திகிறார்கள். அவர்களுக்கு இரண்டு மகன்கள். அடுத்த சில நாட்களில் இவர்களுக்குள் நட்பு மலர்கிறது.

இந்நிலையில் பெண்குழந்தை ஒன்றை பிரசவித்துவிட்டு தேவதர்ஷினி இறந்து போக அந்த குழந்தையை தாங்கள் வளர்க்க விரும்புவதாக சரண்யா கெஞ்ச குழந்தையை அவர்களிடம் தருகிறார் ஆனந்த். இது ஆனந்தின் பத்து வயது முதல் மகனுக்கு பிடிக்கவில்லை, காரணம் பிறந்த பெண்குழந்தையை தன் அம்மாவாக அவன் நினைப்பது.

அப்பாவிடம் அவன் அடிக்கடி தங்கை வேண்டும் என்று வலியுறுத்துவதால் ஏற்படும் சென்டிமென்ட் சிக்கலில் திரைக்கதை நகர்கிறது. சுஜிதா தன் அக்காள் பையனின் பக்கம் சேர்ந்து குழந்தையை திரும்ப பெற எடுக்கும் நடவடிக்கைகள் சுவாரசியமானவை.

முடிவில் சரண்யா – சம்பத் தம்பதியிடம் இருந்து குழந்தையை திரும்ப பெற்றார்களா இல்லையா என்பதை செண்டிமென்ட்டுடன் சொல்கிறோம்,” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.