ஆர்யா, கிருஷ்ணா, தீபா சன்னதி, சுவாதி நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் யு.டி.வி. நிறுவனம் தயாரித்துள்ள படம் - யட்சன். இந்தப் படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் நடிகர் ஆர்யா பேசியதாவது:
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 5 படங்களில் நடித்துள்ளேன். இருவருக்கும் இடையே உள்ள நட்புதான் அதற்கு காரணம். ஆனால், படப்பிடிப்பின்போது என்னுடைய நண்பன் என்பதுபோல அவர் நடந்துகொள்ள மாட்டார். ஒரு இயக்குநராகவே இருப்பார். ‘பட்டியல்’ படத்தின் முதல்நாள் படப்பிடிப்பில், ஒரு பெரிய பாலத்தில் இருந்து ஆற்றில் குதிக்கச் சொன்னார். நான் தயங்கினேன். உடனே, ‘நான் குதித்துக் காட்டட்டுமா?’ என்று விஷ்ணுவர்தன் கேட்டார். எதுவாக இருந்தாலும் அவர் செய்துகாட்டுவார். நானே செய்துகாட்டுகிறேன் என்பார். எனவே அடுத்த நிமிடம் நானே குதித்து விட்டேன்.
உங்களுக்குப் பெண் பார்க்கிறார்களா?
அந்தக் கஷ்டத்தை என் பெற்றோர்களுக்குத் தரமாட்டேன். காதல் திருமணம்தான் செய்து கொள்வேன். எனக்கு மனைவியாக வரப்போகிறவர் நடிகையாக இருப்பாரா அல்லது வேறு ஒரு பெண்ணா என்பதை முடிவு செய்யவில்லை.
பரந்த மனதுடன், ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்று நயன்தாராவுக்கு வாழ்த்து கூறியிருக்கிறீர்களே?
இப்போதும் சொல்கிறேன். அவர் எங்கிருந்தாலும் வாழ்க. அவருடைய திருமணத்தில் நான் நிச்சயமாக கலந்து கொள்வேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்!

யார் அனுமதி கொடுத்தது? பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட துணை ஆணையர்!

உலகக் கோப்பை: ஈரானுக்குப் பதிலாக விளையாட டிரம்ப் விடுத்த அழைப்பை நிராகரித்த இத்தாலி!

ஆம் ஆத்மியில் இருந்து விலகிய எம்.பி.க்களுக்கு பஞ்சாப் முதல்வர் கடும் கண்டனம்
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


