நயன்தாரா திருமணத்தில் கலந்துகொள்வேன்: ஆர்யா

இப்போதும் சொல்கிறேன். அவர் எங்கிருந்தாலும் வாழ்க. அவருடைய திருமணத்தில்...
நயன்தாரா திருமணத்தில் கலந்துகொள்வேன்: ஆர்யா
Updated on
1 min read

ஆர்யா, கிருஷ்ணா, தீபா சன்னதி, சுவாதி நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் யு.டி.வி. நிறுவனம் தயாரித்துள்ள படம் - யட்சன். இந்தப் படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் நடிகர் ஆர்யா பேசியதாவது:

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 5 படங்களில் நடித்துள்ளேன். இருவருக்கும் இடையே உள்ள நட்புதான் அதற்கு காரணம். ஆனால், படப்பிடிப்பின்போது என்னுடைய நண்பன் என்பதுபோல அவர் நடந்துகொள்ள மாட்டார். ஒரு இயக்குநராகவே இருப்பார்.  ‘பட்டியல்’ படத்தின் முதல்நாள் படப்பிடிப்பில், ஒரு பெரிய பாலத்தில் இருந்து ஆற்றில் குதிக்கச் சொன்னார். நான் தயங்கினேன். உடனே, ‘நான் குதித்துக் காட்டட்டுமா?’ என்று விஷ்ணுவர்தன் கேட்டார். எதுவாக இருந்தாலும் அவர் செய்துகாட்டுவார். நானே செய்துகாட்டுகிறேன் என்பார். எனவே அடுத்த நிமிடம் நானே குதித்து விட்டேன்.

உங்களுக்குப் பெண் பார்க்கிறார்களா?

அந்தக் கஷ்டத்தை என் பெற்றோர்களுக்குத் தரமாட்டேன். காதல் திருமணம்தான் செய்து கொள்வேன். எனக்கு மனைவியாக வரப்போகிறவர் நடிகையாக இருப்பாரா அல்லது வேறு ஒரு பெண்ணா என்பதை முடிவு செய்யவில்லை.

பரந்த மனதுடன், ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்று நயன்தாராவுக்கு வாழ்த்து கூறியிருக்கிறீர்களே?

இப்போதும் சொல்கிறேன். அவர் எங்கிருந்தாலும் வாழ்க. அவருடைய திருமணத்தில் நான் நிச்சயமாக கலந்து கொள்வேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com