விஜய் டிவி தொகுப்பாளரான ரம்யா, தன் திருமண உறவை முறித்துக்கொண்டதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
ரம்யா, லண்டனில் எம்.எஸ் சட்டம் மற்றும் பொருளாதாரத்துறையில் பட்ட மேற்படிப்பு படித்த அப்ரஜீத்தை சென்ற வருடம் பிப்ரவரி 21 அன்று திருமணம் செய்துகொண்டார். சில மாதங்களுக்கு முன்பு ரம்யா, கணவரைப் பிரிந்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால் ரம்யா தரப்பில் இருந்து இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இப்போது முதல்முறையாக தனது திருமண முறிவு குறித்து தகவல் தெரிவித்துள்ளார் ரம்யா. நேற்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். ஆமாம். பரஸ்பர சம்மதத்துடன் என்னுடைய திருமண உறவை முறித்துக்கொண்டுள்ளேன். என் நண்பர்களுக்கும் ஊடகங்களுக்கும் ஒரு வேண்டுகோள் - இது என் தனிப்பட்ட விவகாரம். இதனை ஊடகங்களும், நண்பர்களும் மதித்து நடந்து கொள்ள வேண்டும். இப்போது என் கவனம் எல்லாம் வேலையில் மட்டும்தான். அதற்கு ஊக்கமளிப்பதற்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்!

யார் அனுமதி கொடுத்தது? பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட துணை ஆணையர்!

உலகக் கோப்பை: ஈரானுக்குப் பதிலாக விளையாட டிரம்ப் விடுத்த அழைப்பை நிராகரித்த இத்தாலி!

ஆம் ஆத்மியில் இருந்து விலகிய எம்.பி.க்களுக்கு பஞ்சாப் முதல்வர் கடும் கண்டனம்
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


