நடிகர் சங்கத் தேர்தலில் அரசியலைக் கலக்க முயற்சிப்பது கண்டனத்துக்குரியது என்றார் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார்.
நடிகர் சங்கத் தேர்தலுக்காக ஆதரவு கேட்டு புதுக்கோட்டையில் உள்ள முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இலங்கையில் நடந்த போர்க் குற்றம் தொடர்பாக, அமெரிக்கா எத்தகைய தீர்மானத்தை கொண்டு வந்தாலும் இந்தியா சர்வதேச விசாரணைக்கு இலங்கையை உள்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வருகிற 29-இல் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்ளும் நமக்கு நாமே சுற்றுப் பயணம் அரசியல் உள்நோக்கம் கொண்டது.
நடிகர் சங்க நிர்வாகிகள் மீது ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை எதிரணியினர் கூறி வருகின்றனர். அதுதொடர்பாக வழக்குகளை அவர்கள் சந்திப்பது உறுதி. தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் அனைவரும் ஒற்றுமையோடு இருக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். நடிகர் சங்கத் தேர்தலில் அரசியலைக் கலக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.
எந்த ஒரு தேர்தலிலும் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து வாக்களிக்கக் கேட்டுக் கொண்டதில்லை. அவர் நடிகர் சங்கத்தில் நிரந்தர உறுப்பினராக இருந்து வருவதால் அவரது ஆதரவு எங்களுக்கு எப்போதும் இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தத் தேர்தல் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. நாங்கள் எங்களது கடமையை சிறப்பாகவே செய்து வருகிறோம். இதனால், எங்கள் அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


