‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கபாலி எப்போது ரிலீஸ்? புதிய தகவல்!

இப்போது சென்னையில் படப்பிடிப்பு நடக்கிறது. பிறகு மீதிக்காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்படும்.

News image
Updated On :26 செப்டம்பர் 2015, 9:54 am

ஐஏஎன்எஸ்

ரஜினி - இயக்குநர் ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் படம் - கபாலி. இந்தப் படத்தில் சென்னையைச் சேர்ந்த தாதா கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். ராதிகா ஆப்தே, தினேஷ், தன்ஷிகா, கலையரசன் ஆகியோரும் நடிக்கிறார்கள். படம் எப்போது வெளிவரும் என்பது பற்றி புதிய தகவல் வெளிவந்துள்ளது.

‘ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை. ஆனால் கபாலி, தமிழ்ப் புத்தாண்டுச் சமயத்தில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்போது சென்னையில் படப்பிடிப்பு நடக்கிறது. பிறகு மீதிக்காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்படும். ஜனவரியில் படப்பிடிப்பு முடிந்துவிடும். இரண்டு மாதங்கள் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடக்கும். 2016 ஏப்ரலில் படம் வெளியாகும்’ என்று படக்குழுவினர் கருத்து தெரிவித்தார்கள்.

கபாலி படத்தை தாணு தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.