ஐஸ்வர்யா ராஜேஷ்.
ஐஸ்வர்யா ராஜேஷ்.

அண்ணாவுக்கு ஆதரவு கோரிய ஐஸ்வர்யா ராஜேஷ்: விமர்சிக்கும் ரசிகர்கள்!

பிக் பாஸ் வீட்டில் நாமினேட் செய்யப்பட்டுள்ள தனது சகோதரருக்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் டிவிட்டரில் ஆதரவு கோரிய நிலையில், அவரது ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
Published on

பிக் பாஸ் வீட்டில் நாமினேட் செய்யப்பட்டுள்ள தனது சகோதரருக்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் டிவிட்டரில் ஆதரவு கோரிய நிலையில், அவரது ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 போட்டி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா, விக்ரமன், ஆயிஷா, அமுதவாணன், பாடகர் ஏடிகே, மைனா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரும், சின்னத்திரை நடிகருமான மணிகண்டாவும் கலந்து கொண்டுள்ளார்.

இந்த சீசனில் இதுவரை சாந்தி, ஜி.பி.முத்து, அசல், செரினா, மகேஸ்வரி, நிவா உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பிக் பாஸ் தமிழ் சீசன் 6-ல் முதல் முறையாக இந்த வாரம் ‘ஓபன் நாமினேஷன்’ நடைபெற்றது. இதில், கடினமான போட்டியாளர், இவருடன் விளையாட பயமாக இருக்கிறது போன்ற காரணங்களை கூறி பிற போட்டியாளர்களால் மணிகண்டாவும் நாமினேட் செய்யப்பட்டார்.

மேலும், அமுதவானன், அஷீம், தனலட்சுமி, கதிரவன், ராம், ராபர்ட் உள்ளிட்டோரும் நாமினேட் செய்யப்பட்டனர்.

வாரம் முழுவதும் ‘ஹாட் ஸ்டார் ஆப்’பில் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் வார இறுதியில் குறைவாக வாக்கு பெற்றவர் போட்டியை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.

இந்நிலையில், தனது அண்ணன் மணிகண்டாவுக்கு தயவுசெய்து ஆதரவளிக்குமாறு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா ராஜேஷின் பதிவை பகிரும் பிக்பாஸ் ரசிகர்கள், உங்கள் செல்வாக்கை பயன்படுத்த வேண்டாம் என்றும், மக்களை தன்னிச்சையாக முடிவெடுக்க விடுங்கள் என்றும் விமர்சித்து வருகின்றனர்.

மேலும், சிலர் உங்கள் அண்ணாவுக்கு வாக்களிக்கிறோம் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com