திருவாரூர் முருகனாக கார்த்தி?

கார்த்தியின் ஜப்பான் டீசர், நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட திருவாரூர் முருகனின் கதை என்கிற தோற்றத்தைத் தருகிறது.
திருவாரூர் முருகனாக கார்த்தி?

‘ஜிப்ஸி’ படத்துக்குப் பிறகு ராஜுமுருகன் இயக்கியுள்ள படம் ‘ஜப்பான்’. இதில் கார்த்தி நாயகனாகவும், அனு இமானுவேல் நாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் தெலுங்கு நடிகர் சுனில், இயக்குநர் விஜய் மில்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது.

மேலும், ஜப்பான் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. அதேநேரம், திருச்சியில் நடந்த பிரபல நகைக்கடை கொள்ளையை மையமாக வைத்தே படம் உருவாகியுள்ளது  டீசரில் தெரிகிறது.

இதையும் படிக்க: லியோ எப்படி இருக்கிறது?

உண்மையில், கடந்த 2019 ஆம் ஆண்டு திருச்சியில் உள்ள நகைக்கடை ஒன்றில் தென்னிந்திய அளவில் பிரபலமடைந்த கொள்ளையன் ‘திருவாரூர்’ முருகன் தன் கூட்டாளிகளுடன் இணைந்து நகைக்கடையின் சுவரை துளையிட்டு ரூ.13 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகளைக் கொள்ளையடித்தார். ஆனால், தீவிர சோதனையில் கொள்ளையர்களில் ஒருவரான மடப்புரம் மணிகண்டன் காவல்துறையினரிடம் சிக்கினார். அதன்பின், முருகனையும் கைது செய்தனர்.

இச்சம்பவத்துக்கு முன், கர்நாடகத்தில் ஒருமுறை பிடிபட்ட முருகன் அதன்பின் காவல்துறையினரிடம் சிக்கவில்லை. தமிழக காவல்துறை 50 முறைக்கு மேல் தனிப்படை அமைத்தும்  முருகனைப் பிடிக்க முடியவில்லை. ஆனால், தென்னிந்தியா முழுவதும் நூறு கோடிகளுக்கு மேல் கொள்ளையடித்த முருகன் திருச்சி கொள்ளையில் சிக்கியபோதுதான் ஊடக வெளிச்சத்துக்கு வந்தார்.

கைதான முருகனை விசாரித்தபோது, கொள்ளையடித்த தங்க நகைகளை பிரபல நடிகைகளுக்குக் கொடுத்து அவர்களுடன் உறவு வைத்துக்கொண்டதும் தங்கப்பல்லை அணிந்திருந்ததும் தெரிய வந்தது. மேலும், பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததால் முருகனுக்கு எச்ஐவி இருப்பதையும் மருத்துவர்கள் உறுதி செய்தனர். தொடர்ந்து, 2020 அக்டோபர் 27 ஆம் தேதி பெங்களூருவில்  எச்ஐவிக்கு சிகிச்சைப் பெற்று வந்த முருகன் உடல்நலக்குறைவால் காலமானார்.

தற்போது, வெளியாகியிருக்கும் ஜப்பான் டீசரில் கார்த்தியின் கதாபாத்திரமும் தங்கப்பல் தோற்றமும் திருவாரூர் முருகனை நினைவுப்படுத்துவதாகவே இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com