சைரன் ஓடிடியில் எப்போது?

சைரன் ஓடிடியில் எப்போது?

நடிகர் ஜெயம் ரவியின் சைரன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்குப் பின் ஜெயம் ரவியின் இறைவன் படம் வெளியாகி கலவையான விமரிசனங்களைப் பெற்றது. தொடர்ந்து, அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் எழுதி இயக்கிய 'சைரன்' என்ற திரைப்படம் பிப்ரவரி 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமூத்திரகனி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வருகின்ற 19-ஆம் தேதி சைரன் திரைப்படம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com