பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

புஷ்பா 2: நெரிசலில் பெண் பலி! தன் மீதான வழக்கை ரத்து செய்ய அல்லு அர்ஜுன் மனு தாக்கல்

தன்னை கைது செய்ய இடைக்கால தடை விதிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

News image
Updated On :22 ஜூலை 2025, 4:52 pm IST

அல்லு அர்ஜுன் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தன் மீதான குற்ற வழக்கை ரத்து செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த 4-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்டுகளிக்கச் சென்ற 35 வயதான பெண்மனி ஒருவர், அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இந்த திரையரங்குக்கு அல்லு அர்ஜுன் திடீரென வருகை தந்ததாகவும் அப்போது அவரை காணும் ஆவலில் ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டதால், அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் அவதிக்குள்ளாகினர்.

இதைத்தொடர்ந்து, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தார் அளித்த புகாரின் அடிப்படையில், திரையரங்க நிர்வாகம், அல்லு அர்ஜுன் மற்றும் அவரது பாதுகாவலர்கள் மீது காவல்துறை வழக்கு பதிந்த்துள்ளது. இந்த வழக்கில் திரையரங்க உரிமையாளர், மேலாளர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தன் மீதான குற்ற வழக்கை ரத்து செய்ய வேண்டுமென தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் அல்லு அர்ஜுன். அதில் தன்னை கைது செய்ய இடைக்கால தடை விதிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

இதனிடையே, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு அல்லு அர்ஜுன் ரூ. 25 லட்சம் நிவார நிதியளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அல்லு அர்ஜுன் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தன் மீதான குற்ற வழக்கை ரத்து செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த 4-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்டுகளிக்கச் சென்ற 35 வயதான பெண்மணி ஒருவர், அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இந்த திரையரங்குக்கு அல்லு அர்ஜுன் திடீரென வருகை தந்ததாகவும் அப்போது அவரை காணும் ஆவலில் ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டதால், அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் அவதிக்குள்ளாகினர். அதில் அந்த பெண் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கூட்ட நெரிசலில் சிக்கிய அவரது 8 வயது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதைத்தொடர்ந்து, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தார் அளித்த புகாரின் அடிப்படையில், திரையரங்க நிர்வாகம், அல்லு அர்ஜுன் மற்றும் அவரது பாதுகாவலர்கள் மீது காவல்துறை வழக்கு பதிந்த்துள்ளது. இந்த வழக்கில் திரையரங்க உரிமையாளர், மேலாளர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தன் மீதான குற்ற வழக்கை ரத்து செய்ய வேண்டுமென தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் அல்லு அர்ஜுன். அதில் தன்னை கைது செய்ய இடைக்கால தடை விதிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

இதனிடையே, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு அல்லு அர்ஜுன் ரூ. 25 லட்சம் நிவார நிதியளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.