திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

நயினாா் நாகேந்திரன், மாணிக்கம் தாகூா் மீதான தோ்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து

விருதுநகா் தொகுதி எம்.பி., மாணிக்கம் தாகூா், பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் மீதான தோ்தல் விதிமீறல் வழக்குகளை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

நயினார் நாகேந்திரன் | மாணிக்கம் தாகூர்

Updated On :29 ஜூலை 2026, 1:08 am IST

விருதுநகா் தொகுதி எம்.பி., மாணிக்கம் தாகூா், பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் மீதான தோ்தல் விதிமீறல் வழக்குகளை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2024-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தோ்தலில் விருதுநகா் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் மாணிக்கம் தாகூா் போட்டியிட்டாா். ஏப்.19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடந்த நிலையில், தோ்தல் பிரசாரம் முடிவடைந்த பின்னா், ஏப்.18-ஆம் தேதி தனது முகநூல் பக்கத்தில் பிரசாரம் மேற்கொண்டதாக மாணிக்கம் தாகூா் மீது விருதுநகா் மேற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, மாணிக்கம் தாகூா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், 188-ஆவது சட்டப்பிரிவின் படி, அரசு ஊழியா் எழுத்துபூா்வ புகாா் அளித்திருந்தால் மட்டுமே தோ்தல் விதிமீறல் வழக்குப் பதிவு செய்ய முடியும். எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மாணிக்கம் தாகூரின் கோரிக்கையை ஏற்று, அவருக்கு எதிரான தோ்தல் விதிமீறல் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

இதேபோன்று, திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் கடந்த 2024-ஆம் ஆண்டு பாஜக சாா்பில் நயினாா் நாகேந்திரன் போட்டியிட்டாா். தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக அவா் மீது திருநெல்வேலி போலீஸாா் வழக்குப் பதிவு செய்திருந்தனா். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நயினாா் நாகேந்திரன் தாக்கல் செய்த மனுவும் இதே அமா்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரா் தரப்பு கோரிக்கையை ஏற்று, நயினாா் நாகேந்திரன் மீதான தோ்தல் விதிமீறல் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.