நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பல துறைகளில் அழுத்தமான தடங்களைப் பதித்தவர். 2016-ல் அவரது இயக்கத்தில் வெளியான பா. பாண்டி திரைப்படம் மக்களிடையேயும், திரை ஆர்வலர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அந்த வெற்றிக்குப்பின் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் நடிப்பில் மட்டுமே அதிக கவனம் செலுத்திய தனுஷ் இப்போது மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். தனது 50ஆவது படத்தை அவரே எழுதி, இயக்கி, நடித்துள்ளார்.
கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு "ராயன்" எனப் பெயர் சூட்டியுள்ளனர். இந்தப் படத்தில் பெயர் அறிவிப்பு போஸ்டர் சமீபத்தில் வெளியாகிய நிலையில், இந்தத் திரைப்படத்தில் நடிக்கும் எஸ்.ஜே.சூரியாவின் தோற்றம் குறித்த போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










