'எந்திரனில் முக்கிய தவறு', இணையத்தில் வைரலாகும் பதிவு!

2010-ல் வெளியான எந்திரன் திரைப்படத்தில் முக்கிய தவறைக் கண்டுபிடித்துவிட்டதாக செய்யப்பட்ட பதிவு,  இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. 
'எந்திரனில் முக்கிய தவறு', இணையத்தில் வைரலாகும் பதிவு!

சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து 2010ல் வெளியான திரைப்படம் எந்திரன். ரோபோ ஒன்றை மையமாக வைத்து வெளியாகி உலக அளவில் பெறும் வரவேற்பைப் பெற்றது. 

14 வருடங்களுக்குப் பிறகு இந்த திரைப்படத்தில் முக்கியமான தவறு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். அதி புத்திசாலியான 'சிட்டி' ரோபோ, கணிதத்தில் குறைவான அறிவு கொண்டிருப்பதாக கிண்டலடிக்கின்றனர். 

வசீகரன் 'சிட்டி' ரோபோவை முதன் முதலாக அறிவியலாளர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் அறிமுகப்படுத்தும் காட்சியில், பலர் சிட்டியிடம் பல கேள்விகளைக் கேட்பார்கள். அதற்கு சிட்டி சரியாக பதிலளித்து அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்துவதுபோல் காட்டப்பட்டிருக்கும். 

அதில் ஒரு கேள்வி, '24157817 ஃபினோக்கி நம்பரா?' அதற்கு சிட்டி 'ஆம் 22 ஆவது 'ஃபினோக்கி நம்பர்' எனப் பதிலளிக்கும். இதை சரிபார்த்த நபர் ஒருவர் உண்மையில் 22 ஆவது ஃபினோக்கி நம்பர் 17711தான் என இணையத்தில் பதிவிட்டார். அந்தப் பதிவு இணையத்தில் பெரும் சிரிப்பலைகளையும், விவாதத்தையும் கிளப்பியுள்ளன. 

'இவ்வளவு கான்ஃபிடன்ட்டாக சொன்னால் எந்த டீச்சரும் ரைட்டுதான் போடுவார்' என ஒருவர் கமென்ட் செய்துள்ளது நகைப்பூட்டத் தவறவில்லை. 'சிட்டி இறந்துவிட்டது, அதைத் தவறு சொல்லிப் பயனில்லை' என இன்னொருவர் பதிவிட்டுள்ளார்.  ';எவ்வளவோ படங்கள் லாஜிக்கே இல்லாமல் எடுக்கிறார்கள். இது என்ன பெரிய தவறா?' என சண்டை கிளப்பும் கமெண்ட்களும் கொட்டிக்கிடக்கின்றன. 

ரசிகர்கள் திரைப்படங்களில் தவறு கண்டுபிடித்து அதை இயக்குநர்கள் சரி செய்யும் சம்பங்களும் கூட பல நிகழ்ந்துள்ளன. உதாரணத்திற்கு உலக அளவில் மாபெரும் வெற்றி பெற்ற 'டைட்டானிக்' திரைப்படத்தில் கூட ரசிகர்கள் தவறு கண்டுபிடித்தனர். இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன் மறுவெளியீட்டில் அதைச் சரி செய்தது குறிப்பிடத்தக்கது.  
   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com