தனக்குத்தானே கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய எதிர்நீச்சல் நாயகி!

கன்னடத்தில் 3 தொடர்களிலும், தெலுங்கில் இரு தொடர்களிலும் நடித்துள்ளார்.
தனக்குத்தானே கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய எதிர்நீச்சல் நாயகி!
Published on
Updated on
2 min read

எதிர்நீச்சல் தொடரின் நாயகி மதுமிதா தனக்குத் தானே கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியதைப்போன்று வெளியிட்டுள்ள விடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது.

தனியார் சொகுசு விடுதியில் மாலை நேரத்தில் கையில் கேக் உடன் நடந்துவந்து அதனை வெட்டி தானே உண்பதைப்போன்று விடியோ பதிவு செய்துள்ளார்.

தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சமூகவலைதளங்களிலும், நேரிலும் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் அந்த விடியோ பதிவின் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.

தனக்குத்தானே கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய எதிர்நீச்சல் நாயகி!
தமன்னாவைப்போல் மாறிய எதிர்நீச்சல் நாயகி மதுமிதா! ரசிகர்கள் பகிரும் விடியோ!!

எதிர்நீச்சல் தொடரில் நாயகியாக நடித்து வருபவர் நடிகை மதுமிதா. அதில் ஜனனி என்ற பாத்திரத்தில் நடிக்கிறார். எதிர்நீச்சல் தொடரில் நடித்துவருவதன் மூலம் பலதரப்பட்ட ரசிகர்களை மதுமிதா கவர்ந்துள்ளார்.

இவர் இதற்கு முன்பு தெலுங்கில் நடித்த நம்பர் ஒன் கோடாலு என்ற தொடர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத்தந்தது. அதற்கு முன்பு கன்னடத்தில் 3 தொடர்களிலும், தெலுங்கில் இரு தொடர்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் கடந்த 2019ம் ஆண்டு பிரியாத வரம் வேண்டும் என்ற தொடரில் நடித்திருந்தார். தற்போது எதிர்நீச்சல் தொடரில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான சின்னத்திரை விருதையும் வென்றுள்ளார்.

தனக்குத்தானே கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய எதிர்நீச்சல் நாயகி!
ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய சீரியல் நடிர்கள்!
dinamani

பெங்களூருவில் பிறந்த நடிகை மதுமிதா, 25வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று விடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், அவருக்கு சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தனக்குத்தானே கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய எதிர்நீச்சல் நாயகி!
சினிமா தயாரிப்பாளரை கரம்பிடித்த சீரியல் நடிகை!
dinamani

விடியோ பதிவில் மதுமிதா குறிப்பிட்டுள்ளதாவது, வாழ்த்து வெள்ளத்தில் மிதந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களின் உள்ளம் நிறைந்த வாழ்த்து என் நாளை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. ஒவ்வொரு வாழ்த்தும் எனக்கு மதிப்பு மிக்கது. உங்கள் அன்பு என்னை நெகிழச்செய்தது. என் பிறந்தநாளை மிகவும் சிறப்பானதாக்கியதற்கு நன்றி. இது போன்ற நண்பர்களையும் ரசிகர்களையும் பெற்றதற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாய் உணர்கிறேன். நினைவுகளை சேகரிக்க இதோ இன்னுமோர் ஆண்டு கூடுகிறது. இந்த அழகான பயணத்தை இணைந்து தொடர்வோம். என் அன்பையும் நன்றியையும் உங்களுக்கு உரித்தாக்குகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com