சென்னையில் நடிகை திரிஷா வீடு உள்பட 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிஜிபி அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு திங்கள்கிழமை வந்த மின்னஞ்சலில், ஆழ்வாா்பேட்டை செனடாப் சாலையில் உள்ள நடிகை திரிஷா வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, நடிகை திரிஷா வீட்டில் போலீஸாரும், வெடிகுண்டு கண்டறிந்து அகற்றும் நிபுணா்களும் சோதனை நடத்தினா். சோதனைக்குப் பின்னா் அங்கிருந்து எந்த வெடி பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் அந்த மின்னஞ்சல் வந்திருப்பது தெரிய வந்தது.
இதேபோல, சாலிகிராமம் பாஸ்போா்ட் அலுவலகத்துக்கும், தேனாம்பேட்டையில் உள்ள வங்கதேச துணை தூதரகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அங்கும் போலீஸாா் சோதனை செய்தனா். ஆனால் அங்கிருந்து எந்த வெடி பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இந்தச் சம்பவங்கள் குறித்து அந்தந்தப் பகுதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.
தொடர்புடையது

நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சேலம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை

மும்பையின் முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

