விஷ்ணு விஷாலின் கட்டா குஷ்தி - 2 டீசர் அமோக வரவேற்பை பெற்று 45 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டில் செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியான கட்டா குஷ்தி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது.
வழக்கமாக ‘விளையாட்டு டிராமா’ போல் இல்லாமல், கணவன் - மனைவி இடையிலான மோதலை நகைச்சுவையுடன் எதிர்பாராத ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாக்கப்பட்டிருந்தது. இந்தப் படம் வணிகரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது.
இந்த நிலையில், பெரிய வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் பாகத்துக்கான டீசர் கடந்த ஜூலை 3 ஆம் தேதி வெளியானது.
மீண்டும் அதே கூட்டணியில் ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில் ஷான் ரோல்டன் இசையில் உருவாகியிருக்கும் ‘கட்டா குஸ்தி 2’ படத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வரியா லட்சுமி இருவரும் நடித்துள்ளனர்.
இவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, கருணாஸ், முனிஸ்காந்த், காளி வெங்கட், கருணாகரன் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் பலரும் நடித்துள்ளனர்.
இந்தப் படமும் முதல் பாகத்தைப் போலவே நகைச்சுவை, குஸ்தியை மையப்படுத்தி தயாராகியுள்ளது. பெரும் வரவேற்பை பெற்ற டீசர், யூடியூபில் கடந்த மூன்று நாள்களில் 45 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும், இந்த டீசர் ஒரு லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது.
Summary
Gatta Kusthi 2 Teaser goes BIG A massive 4.5 million views with over 100K likes, and trending at 3
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கட்டா குஸ்தி - 2 டீசர்!

கட்டா குஸ்தி - 2 டீசர் அப்டேட்!

கட்டா குஸ்தி - 2 மேக்கிங் விடியோ!

கட்டா குஸ்தி 2 படத்தில் இம்பாக்ட் பிளேயராக ரம்யா கிருஷ்ணன்!
விடியோக்கள்

கோடையில் பொடுகுத் தொல்லை அதிகம் ஏற்படுவது ஏன்? | Life Style | Hair Health | Dandruff

Nanjil Sampath Interview |காங்கிரசுக்கு ஏன் கொடுத்தார் விஜய்? | TVK | CM Vijay | Congress

அண்ணாமலையின் தனிக்கட்சி அறிவிப்பு: பின்னணி என்ன? | Annamalai | BJP | Explainer


