ஜூன் 18ல் ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது!ரஜினி அழைத்தும் மறுப்பு தெரிவித்து பாஜகவில் இணைந்தேன்! அண்ணாமலைஅரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முழு வரி விலக்கு! மத்திய அரசு தாம்பரத்தில் சிக்னல் கோளாறு! நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள்! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! முதல்வா் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது! பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத ஆண் சடலம்! உலகின் முதல் 4 நாடுகளில் இந்தியா! ரஷிய அதிபர்தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

அண்ணாமலையின் இது நம்ம இயக்கம்! லட்சத்தை எட்டிய உறுப்பினர் எண்ணிக்கை!

இது நம்ம இயக்கம் என்று அண்ணாமலை அறிவித்ததும் ஆயிரக்கணக்கானோர் இணைந்துகொண்டேயிருக்கிறார்கள்.

News image

இது நம்ம இயக்கம் - From web Page

Updated On :5 ஜூன் 2026, 12:43 pm IST

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்த அண்ணாமலை, அந்தக் கட்சியிலிருந்து விலகி, இன்று இது நம்ம இயக்கம் (We the leader) என்ற அமைப்பை உருவாக்கியிருப்பதாக அறிவித்த சில விநாடிகளில் ஆயிரக்கணக்கானோர் இணைந்துகொண்டேயிருக்கிறார்கள்.

பகல் 1 மணிக்கு இந்த இயக்கத்தில் இணைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி, அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.

பகல் 1 மணியளவில்

பகல் 1 மணியளவில்

அண்ணாமலை, தன்னுடைய இயக்கம் பெயர் 'இது நம்ம இயக்கம்' என்று பெயரை அறிவித்து லிங்க்கை வெளியிட்டபோது 14 ஆயிரம் பேர் மட்டுமே இணைந்திருந்தனர்.

ஆனால், அவர் நேரலையில் பேசிக் கொண்டிருக்கும்போதே, ஆயிரக்கணக்கானோர் பல்வேறு கட்சியிலிருந்தும் விலகி, தங்களை இது நம்ம இயக்கம் என்ற அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டேயிருக்கிறார்கள்.

சுமார் 12 மணிக்கு அண்ணாமலை பேசத் தொடங்கிய நிலையில், 12.42 மணியளவில், அந்த இயக்கத்தில் கிட்டத்தட்ட 60 ஆயிரம் பேர் இணைந்துவிட்டனர். இந்த எண்ணிக்கை சற்றும் ஓயாமல், ஓடிக்கொண்டேயிருக்கிறது. இன்னும் சில நிமிடங்களில் இது ஒரு லட்சமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் 5ஆம் தேதி பகல் 12.42 மணி நிலவரம்

ஜூன் 5ஆம் தேதி பகல் 12.42 மணி நிலவரம்

முதலில் இயக்கமாக அனைவரையும் உள்ளே கொண்டுவந்து, பிறகு அரசியல சொல்லிக்கொடுத்து கட்சியாக மாற்றுவேன். தமிழ்நாட்டின் அரசியல் மொழி, இலக்கணத்தை மாற்ற வேண்டும் என்பதே நோக்கம். நான் தொடங்கியுள்ள தனி இயக்கம் தமிழகத்தில் அடுத்து நடக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் என்றும் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இது நம்ம இயக்கம் என்ற பெயரில் அண்ணாமலை புதிய இயக்கத்தைத் தொடங்கி wetheleader என்ற இணையதளத்தின் லிங்கையும் பகிர்ந்திருந்தார். அவர் தன்னுடைய இயக்கத்தின் லிங்கை அறிவித்ததும் ஆயிரக்கணக்கானோர் அதில் தங்களது பெயர், ஊர் போன்ற விவரங்களை அளித்து உறுப்பினர்களாக சேர்ந்து கொண்டேயிருக்கிறார்கள்.

மறுபக்கம் எக்ஸ் போன்ற சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது இது நம்ம இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டதற்கான அடையாள அட்டையையும் பகிர்ந்து வருகிறார்கள்.

12 மணிக்கு அண்ணாமலை பேச்சைத் தொடங்கிய நிலையில், பகல் 1.10 மணிக்கெல்லாம் 1.24 லட்சம் பேர் இணைந்துவிட்டனர் என்கிறது இணையதள தரவுகள்.

Summary

This is our movement.. People will join when Annamalai is announced!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.