புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளதாகவும், வருகின்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளேன் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும், இது நம்ம இயக்கம் (We the Leaders) என்ற தளத்தை தொடங்கியிருக்கும் அண்ணாமலை, உறுப்பினர் சேர்க்கையையும் தொடங்கியுள்ளார்.
பாஜகவிலிருந்து விலகிய அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, புதிய இயக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சமூக ஊடகப் பக்க நேரலை அண்ணாமலை பேசியதாவது:
“பாஜகவில் இணைந்து தமிழ்நாடு மக்களுக்காக 6 ஆண்டுகள் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. எந்த இடத்தில் இணைந்தேனே, அதே இடத்தில் மரியாதைதோடு சொல்லிவிட்டு, தமிழர் பண்போடு வெளியேறியுள்ளேன்.
புதிய பாதை, புதிய இயக்கத்தை தொடங்கவுள்ளோம். எனது அரசியல் பாதை நீண்ட நெடியது. சாதாரணமாக வந்துவிடவில்லை. லக்னெளவில் நான் படிக்கும்போது, 2009-ல் தேமுதிகவில் விஜயகாந்த்திடம் 3 மாதங்கள் இன்டர்ன்ஷிப் செய்தேன். அதன்பிறகு 10 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜகவில் 6 ஆண்டுகள் பயணித்தேன்.
2020 ஆகஸ்ட் 24 அன்று பாஜகவில் இணையும்போது ரஜினிகாந்த் எனக்கு தொடர்புகொண்டார். அப்போது, அவரது இயக்கத்தில் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அப்போது என் கண்முன் இருந்தது, அவர் அரசியலுக்கு வருவது தமிழ்நாட்டுக்கு நல்லது, ஆனால், கோவிட் காலத்தில் அரசியலுக்கு வராமல் இருப்பது அவருக்கு நல்லது என நினைத்தேன். பாஜகவில் இணைவேன் என்ற வாக்குறுதியை மீறக் கூடாது என அப்போது நினைத்தேன். பின்னர், ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டேன். யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இதை கூறுகிறேன்.
பாஜகவில் பயணித்த 6 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் அடையாளத்தையும் கலாசார பாரம்பரியத்தையும் விட்டுக்கொடுத்ததில்லை. நான் பெருமைமிகு இந்தியன், பாரம்பரியத் தமிழன்.
தனித்து தேர்தலை சந்திக்க கட்சித் தலைவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தினேன். மேக்கேதாட்டு பிரச்னையின்போது, கர்நாடகத்தில் ஆட்சியிலிருந்த பாஜகவுக்கு எதிராக தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தினேன்.
பிரதமர் மோடி மீது மரியாதை வைத்துள்ளேன். கடந்த 18 மாதங்களாக எனக்கு இருக்கு கருத்து வேறுபாடுகளை கூறிவருகிறேன். டிசம்பர் 4, 2025-ல் பாஜகவில் இருந்து விலகுவதாக தெரிவித்தேன். ஆனால், தேர்தலை முடித்துவிட்டு முடிவெடுக்க சொன்னார்கள். அதேபோல், கடைசி வரை தேர்தல் களத்தில் பணியாற்றினேன்.
ஆனந்தத்தோடு தமிழ்நாட்டில் புதிய இயக்கத்தை இன்றுமுதல் தொடங்கி உள்ளேன். வரும் பொதுத் தேர்தலில் நமது கட்சி கண்டிப்பாக போட்டியிடும்.
பிம்ப அரசியலை தவிர்த்து, சமானிய அரசியலை முன்னெடுக்கப் போகிறேன். இயக்கமாக தொடங்கி பல்வேறு தரப்பினரை அதற்குள் கொண்டு வந்து, அரசியலை கற்றுக் கொடுக்க வேண்டும். பின்னர்தான், கட்சியாக மாற்ற வேண்டும். அதுவரை தொண்டர்கள் பொருத்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
Summary
Differences of opinion within the party for 18 months! — Annamalai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நமது கட்சியில் நிரந்தர பதவி ஒழிக்கப்படும்! அண்ணாமலை

அண்ணாமலையின் இது நம்ம இயக்கம்! லட்சத்தை எட்டிய உறுப்பினர் எண்ணிக்கை!

நீங்கள் தமிழனா? இந்தியனா? மனக் குமுறலை வெளிப்படுத்திய அண்ணாமலை!

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
விடியோக்கள்

கோட் போட்டு கோட்டை விட்டுட்டீங்களே! முதல்வர் விஜய்க்கு உதயநிதி பதிலடி! | Dinamani

Dinamani வார ராசிபலன்! | June 7 முதல் 13 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்


