முதல்வர் விஜய்யின் பிறந்த நாளில் த்ரிஷாவின் வாழ்த்துப் பதிவில் 5 கேக்குகள் வெட்டப்பட்டதற்கு பல்வேறு ஊகங்களை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். உண்மைதான் என்ன?
தமிழக முதல்வர் விஜய் பிறந்த நாள் கடந்த ஜூன் 22 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அவருக்கு பிரதமர் மோடி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திரையுலகப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். தமிழக சட்டப்பேரவையிலும் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
பலரும் வாழ்த்துத் தெரிவித்த நிலையில், ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் மறக்காமல் வாழ்த்துத் தெரிவிக்கும் த்ரிஷா என்ன வாழ்த்துத் தெரிவிப்பார் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அவர் பிறந்த நாள் தெரிவிக்கவில்லை.
அதே நாளில் அன்றிரவு 7.30 மணி போல, 5 கேக்குகளுடன் விஜக்கு வாழ்த்துத் தெரிவித்து, “எல்லாவற்றையும் அர்த்தமுள்ளதாக மாற்றுபவருக்கு எனது வாழ்த்துகள்❤️🧿 00.00✨” என்று குறிப்பிட்டிருந்தார்.
கடந்தாண்டுகளில் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை மட்டும் பகிர்ந்த த்ரிஷா, இந்தாண்டு 5 கேக்குகளுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்து ஏன்? என்ற கேள்வியுடன் தங்கள் ஊகங்களைத் தெரிவித்து வருகின்றனர் பல நெட்டிசன்கள்.
முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டு விஜய்யுடன் லியோ படத்தில் நடித்திருந்த த்ரிஷா, காஷ்மீரில் படப்பிடிப்பு தளத்தில் விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறி, ஹார்ட் மற்றும் திருஷ்டி (🧿) எமோஜிகளையும் அந்த பதிவில் வெளியிட்டு இருந்தார்.
அதேபோன்று, 2024 ஆம் ஆண்டு விஜய்யுடன் லிப்ட் ஒன்றில் இருக்கும் படத்தை பகிர்ந்து அந்தப் பதிவில், “புயலுக்கு அமைதி, அமைதிக்கு புயல், இன்னும் போகவேண்டிய மைல்கற்கள் இருக்கின்றன” எனப் பதிவிட்டிருந்தார்.
2025 ஆம் ஆண்டில் தனது நாய் இஸ்ஸியை விஜய் கொஞ்சும் புகைப்படத்தை பகிர்ந்து “பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்புக்குரியவரே” என்று குறிப்பிட்டு அரவணைக்கும் எமோஜி மற்றும் திருஷ்டி எமோஜியையும் பதிவிட்டு இருந்தார்.
இதனால், தற்போது என்ன வாழ்த்தப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்த த்ரிஷாவின் பதிவில், 5 கேக் வெட்டி அவர் கொண்டாடிய புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.
எப்போதும் புகைப்படத்தை மட்டும் பகிரும் த்ரிஷா, இந்த முறை கேக்குகளுடன் படத்தைப் பகிர்ந்ததால், ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்தது. அதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்கள் ஊகங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி, விஜய்யும் த்ரிஷாவும் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒன்றாக இருப்பதால், அந்தப் புகைப்படத்தில் ஐந்து கேக்குகள் இருப்பதாக ஒருவர் யூகித்திருந்தார். அதனாலேயே, த்ரிஷா 5 கேக்குகளுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்ததாகவும் விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திருமணம், விவாகரத்து குறித்து த்ரிஷா சொன்னது என்ன?

விஜய் பிறந்த நாள்! த்ரிஷா பகிர்ந்தது ஏஐ படமா?

00:00! மிக அதிக கருத்துகளைப் பெற்ற பிறந்த நாள் பதிவு!

முதல்வர் விஜய் பிறந்த நாள்... த்ரிஷா ஏன் வாழ்த்தவில்லை?
விடியோக்கள்
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan

Con City Movie review | ஏமாறாதே... ஏமாற்றாதே... | Arjun Das | Anna Ben | Yogi Babu





