‘ஓம்’ திரைப்படத்தின் தலைப்பில் திடீர் மாற்றம்!
‘ஓம்’ திரைப்படத்தின் தலைப்பில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...
தனுஷ் - மம்முட்டி.
நடிகர் தனுஷின் ‘ஓம்’ திரைப்படத்தின் தலைப்பில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கும் 55 ஆவது படம் ஓம். இந்தப் படத்தை அமரன் புகழ் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தை தனுஷின் வன்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.
இந்தப் படத்தில் நடிகர் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நஸ்ரூதின் ஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளதால், படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
சாய்யின் இசையில் வெளியான ‘அலாக்கா லோவா’, ‘வீழா வீரா’ மற்றும் ஃபா... ஃபா.. மூன்று பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. ஓம் திரைப்படம் நவ. 20 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் வெள்ளிக்கிழமை (நவ. 13) வெளியாகும் என அறிவிப்பு விடியோ வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், இந்த அறிவிப்பு விடியோவில் ஓம் திரைப்படத்தின் தலைப்பில் சிற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
OM CHAPTER: 1 UDHIRAM THE BLOOD WOOD என்று முதலில் வெளியான நிலையில், தணிக்கைக் குழு பிரச்சினைகளால், O.M OPERATION MOLE என்று தலைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Summary
'Om' is the 55th film to feature actor Dhanush in the lead role. It is directed by Rajkumar Periasamy, known for the film 'Amaran'. The movie is being jointly produced by Dhanush’s Wunderbar Films and Aarteck Studios.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

